பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 73. அவக்கேடு உண்டு. அஃது என்னவெனில்: இவளைத் தொலைவிலிமங்கலத்திற்குக் கொண்டு செல்வீர்களாயின் இவளை இழக்க நேரிடும். இவளை அங்குக் கொண்டு போகாமவிருந்தால் இவளுடன் சேர்ந்து நெடுங்காலம் வாழலாம். இந்த ஒரு கண்டத்திற்கு இவள் தப்பிப் பிழைப்பது அரிது.” என்றும் சொல்வியிருந்தனர். ஆனால், இவள் பிறந்த குடி தொலைவிலிமங்கலத்திற்குக் கொண்டு போகாதிருக்கும்படியான குடி அன்று; பரம வைணவ நெறியைச் சார்ந்த குடி இவளைப் பெறுவோமாயினும் சரி, இழப்போமாயினும் சரி, அங்கு இவளை அழைத்துச் சென்று அத்தலத்து எம்பெருமானைச் சேவைபண்ணி வைத்தே தீர்வது" என்றிருக்கும்படியான குடி, அப்படியே அவர்கள் செய்யும்படியாகவும் நேர்ந்தது. அதனால் விளைந்த 'விபரீதத்தையே தோழி எடுத்துரைக்கின்றாள். - பராங்குச நாயகி தொலைவிலிமங்கலத்து எம்பெரு மானைச் சேவித்த நாள் தொட்டு அவனுடைய பேரகிழல் ஈடுபட்டு அவனுடைய திருமேனி அழகினையே வாய்வெருவு கின்றாள். இந்த நிலையைத்தான் தோழி தாய்மாருக்கு எடுத்துரைக்கின்றாள். தவள வொண்சங்கு சக்கர மென்றும் தாம ரைத்தடங் கனென்றும் குவளை யொண்மலர்க் கண்கவர் நீர்மல்க நின்று கின்று குமிறுமே, -திருவாய். 6.5 : 1 (தவள - வெண்ணிறமான; தடம் - விசாலமான மல்க பெருக! இதில் நீலத் திருமேனிக்குப் பாங்காக வெள்ளிய சங்கு விளங்கும் அழகைப் பேசுகின்றாள். 'உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்; கண்படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே' (நாச். திரு 8) என்று