பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 75 11. சிரீவரமங்கலம்' (வானமாமலை): இத்தலம் நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டத்தில் உள்ளது. வட்டத்தின் தலைநகர் நாங்குனேரி. இதே ஊரில் நான்கு ஏரிகள் இருந்தமையால். நான்குநேரி என்ற பெயரால் வழங்கு கின்றது. ஆனால் இன்று நாம் காண்பது ஒரே ஒரு ஏரியே, இது திருக்கோயிலுக்கு அடுத்துள்ளது. ஆதியில் கோயிலின் கருவறையே குளத்திற்குள்தான் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்கள், இன்றும் குளத்தில் நீர் நீறைந் திருக்கும்பொழுது கோயிலின் கருவறையைச் சுற்றி ஒன்றிரண்டு அடி நீர் இருப்பதைக் காணலாம். இந்தத் திருக்கோயில் குளம், ஏரிக்கரையிலுள்ள மரங்கள் எல்லாம் பரமபத நாதனை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். இத்திருத்தலத்து எம்பெருமானை நம் மா ழ் வார் மட்டிலும் ஒரே ஒரு திருவாய்மொழியால் (3,7) மங்களா சாசனம் செய்துள்ளார். இங்குள்ள எம்பெருமான் தோத்தாத் திரி பெருமாளின் இருப்பு வைகுந்தத்தில் பரமபத நாதன் இருப்பை நினைவு படுத்தும். ஆழ்வார் பாசுரங்கள் தம் 2. சி.ரீவரமங்கலம் : நெல்லை. நாகர் கோவில் நெடுஞ் அலையில் நெல்லையிலிருந்து 18-வதுகல் தொல்ை ஜில் இவ்வூர் உள்ளது. திருக்குறுங்குடியிலிருந்து கீழ்த்திசையில் 8 கல் தொலைவு. அடிக்கடிப் பேருந்து வசதிகள் உள்ளன. இராமாநுச கூடங்கள், சத்திரங்கள், உணவு விடுதிகள் உள்ளன. எம் பெருமான்: :வானம்ாமலைப் பெருமான், தெய்வ நாயகன் (உற்சவர்) தோத்தாத்திரிப் பெருமாள், தாயார் : சிரீவரமங்கை நாச்சியார் தோத்தாத் திரிஅம்மை. இருந்த திருக்கோலம். கிழக்கு நோக்கிய திருமுக்மண்டலம், வானமாமலையே! அடியேன் தொழ வந்தருளே (3.7 : 6) என்ற _சகர்த்தைநோக்குமிடத்து வான மாமலை என்ற திருநாமம் எம்பெருமானுக்கு உரியது என்றும், பிறகு இத்திருநாமம் இட்டு இப்பெயரால் திவ்விய தேசமும் வழங்கிவருகின்றதென்றும் அறிகின்றோம்,