பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ . 12. 13. 14. ix இவரிடத்துப் பாடல்பெறத் திவ்ய தேசத் தெம்பெருமான் பலரிவர்முன் காட்சி தந்தார்! தவமுடையார் அறியாத சித்த சித்தில் வரனென்னும் தத்துவநன் நெறிவி ளக்கிப் புவிமுழுதும் வணங்குகிற சோழ நாட்டுள் புகழ்மிக்கத் திருப்பதிகள் ஐந்தினுக்கும் கவிதந்தார்; நால்வேதக் சுருக்காய் நிற்கும் களிதமிழாம் இவர்தமிழும்! மற்று முள்ள பாண்டியநாட்டுப்பதிகள் தம்முள் நம்மின் பராங்குசரும் பாடியவை பன்னி ரண்டாம்! நீண்டமலை நாட்டிலுள்ள ஆறி ரண்டு நிறைபுகழ்கொள் விண்ணகரம் தம்மில் உள்ள ஆண்டகையும் இவரிடத்துப் பாடல் பெற்றார்: அடுத்துவரும் வடநாட்டுத் தலங்கள் உள்ளே பூண்டழிைல் வேங்கடத்தை முதலாக் கொண்ட புண்ணியநற் றல ைமந்தைப் பொலியச் செய்தார்: ஆழ்வார்கள் பதின்மர்களாம்! அவர்க ளுள்ளே ஆழ்வாரென் றாலிவரைத் தான்கு றிக்கும்! ஆழ்வார்கள் உறுப்புக்கள் என்னில் இந்த ஆழ்வாரோ உயிராவர் என்பர் மேலோர்! வாழ்வாகக் கருதுகிற திருமால் தன்னை ~. வணங்கிடவேநாம்சென்றால்,'உமக்கு வாழ்விங்(கு) ஆழ்வாரே என்றவரைத் தூக்கி நாமும் அருள்பெறவே சடாரியெனச் தலையில் வைப்பார்! ஆதித்தன் ஒர்சுடராம்! அடுத்த தான அவதார இராகவனாம் பகல வன்தான்! சோதியெனும் கண்ணனுமோர் கதிர் என் பார்கள்: சொலுமிந்த முவர்களும், சடகோ பர்தாம்