பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 8? திருமுடிமுதல் தோன்றும் திருவபிடேக முதலான எண்ணற்ற சேர்த்தியழகு பொருந்திய திருவாபரணங்களையுடைய அப்பெருமான் கன்னலும் பாலும் அமுதமும் போன்று என் நெஞ்சைவிட்டு நீங்காது நிற்கின்றான் (9); அவனது சோதி வெள்ளத்தில் எழுகின்ற ஒரு திவ்விய உருவம் என் உள்ளத்தில் பிரகாசித்த வண்ணம் நிலைபெற்று நிற் கின்றதே(10) இங்கனம் ஆழ்வார் நாயகி பெற்றதுபவித்த நிலை நம்மையும் பற்றுகின்ற உணர்ச்சியில் நாம் உந்தப் பெறுகின்றோம். இத்திருவாய்மொழிப் பாசுரங்கள் ஒதிஓதி அனுபவிக்கத்தக்கவை. - . கவதிருப்பதிகள் : இவற்றை 1. திருக்குருகூர், 2, 3. தொலைவிலி மங்கலம், 4. திருப்புளிங்குடி, 5. திருப்பேரெயில், 6, சிரீவைகுண்டம், 7. வரகுணமங்கை, 8. திருக்குளந்தை. 9. திருக்கோளுர் என்ற முறையில் நவ திருப்பதிகளாக எண்ணுவது மரபு. இவற்றைச் சேவிப்பது பற்றி ஒரு சிறு யோசனை. சிரீவைகுண்டத்திலிருந்து (5) கிளம்பி, வரகுண மங்கையை (7) முடித்துக் கொண்டு திருக்குருகூருக்கு (1) வருதல்வேண்டும். அங்கிருந்துதிருக்கோளுரைச் (9; சேவித்துக் கொண்டு, தொலைவிலி மங்கலத்திற்கு (2, 3) வந்து இந்த இரட்டைத் திருப்பதிகளைச் சேவித்துக் கொண்டு திருப்பே ரெயிலுக்கு (5) வருதல் வேண்டும். இத்திருப்பதி சேவையை முடித்துக் கொண்டு திருக்குளந்தைக்கு (8) வந்து திருப் புளியங்குடியை (4) அடைதல் வேண்டும். பின்னர் எங்கும் சுற்றி அரங்கனை அடைதல்போல் தொடங்கின் சிரீவை குண்டத்திற்கே (6) திரும்ப வேண்டும். குறிப்பு: 1968 - சூன் திங்கள்_ இந்த நவதிருப்பதி களையும் ஒரே நாளில் ஒரே மூச்சில் சேவிப்பதற்கு என் நண்பர்கள் திரு கூத்தநயினாரும், அவரது அண்ணாச்சி திரு செங்கையா பிள்ளை அவர்களும் (S. R. சுப்பிரமணியப் பிள்ளை பதிப்பகம், திருநெல்வேலி சந்திப்பு) சிற்றுந்து (Van) உதவினார்கள். இவர்கள் இருவரையும் இப்பொழுது நன்றி யுடன் நினைவுகூர்கின்றேன். يَ مستوي