பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மலைநாட்டுத் திருப்பதிகள் நாட்டுத் திருப்பதிகளை பதின்மூன்று என نهر هلال வரையறுத்துள்ளார் திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்கார், அவை : . 1. திருவண்பரிசாரம் 2. திருவாட்டாறு 3. திருவனந்தபுரம் 4. திருவாறன் விளை 5. திருச்செங்குன்றுரர் 6. திருக்கடித்தானம் 7. திருவல்லவாழ் 8. திருவண்வண்டுர் 9. திருப்புலியூர் (குட்டநாடு) 10. திருக்காட்கரை 11. திருமூழிக்களம் 12. திருவித்துவக்கோடு 13. திருநாவாய் இவற்றுள் திருவித்துவக்கோடு என்ற திருப்பதியைத் தவிர பன்னிரண்டையும் மங்காளாசாசனம் செய்துள்ளார் நம் மாழ்வார். இவற்றை முறையே காண்போம்; பாசுரங்களிலும் ஆழங்கால் படுவோம். 1. திருவண் பரிசாரம் :இத்திவ்விய தேசத்தை ஒரே ஒரு பாசுரத்தால் மங்களாசாசனம் செய்கின்றார் ஆழ்வார். 1. திருவண் பரிசாரம் : இது மலைநாட்டிலுள்ள முதல் திருப்பதி. திருநெல்வேலி - நாகர்கோயில் நெடுஞ் சாலையில் நாகர்கோயிலிருந்து சுமார் இரண்டு கல் தொலைவில் (வட திசையில்) உள்ளது: நெடுஞ் சாலையில் ஒரு வாய்க்கால் பாலத்தருகில் இறங்கி