பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் - 37 செய்வானாய் அவர்கட்குப் பரதந்திரப்பட்டிருக்கும் தன்மை எல்லை கடந்து வெள்ளமிட்டோடும்' என்று கூறுகின்றது. இந்த எம்பெருமானைச் சேவிக்கும்-பொழுது, இத்திருவாய் மொழியில் ஆழங்கால்பட்ட நமக்கு நம்மாழ்வாரின் உணர்வு நம்மையும் பற்றுகின்றது." 3. திருவனந்தபுரம் : நாகர் கோயிலிலிருந்து பேருந்து வசதி உண்டு. திருவாட்டாற்றிலிருந்து நாம் அனந்தபுரம் வந்து சேர்கின்றோம். பேருந்தில் வரும்போது எம்மருங்கும் 3. இந்த அநுபவம் மலைநாட்டுத் திருப்பதிகள் என்ற எனது நூலில் விரிவாக விளக்க்ப் பெற்றுள்ளது. (கட்டுரை-2) ஆண்டுக் கண்டு தெளிக,

  • திருவனந்தபுரம் : தென்னிந்திய இரு ப் பூ பீ தி நிலையம். நிலையத்திவிருந்து சுமார் ; கல் தொலைவிலுள்ளது திருக்கோயில், இருப்பூர்தி நிலையத்திற்கு எதிராக அருகிலே நல்ல நல்ல தங்கும் விடுதிகளும் உள்ளன; உணவு விடுதிகளும் உள்ளன. வசதியாகத் தங்கிக் கொள்ளலாம். திருக் கோயில் திருவாட்டாற்றுத் திருக்கோயில் போலவே சற்று உயரமான இடத்தில் அமைந் துள்ளது. பல படிகள் ஏறியே கோயிலினுள் நுழைய வேண்டும். திருக்கோயிலுக்கருகிலேயே திருவாங்கூர் அரசரின் அரண்மனையும் உள்ளது. அரண்மனையி லிருந்து அரசகுடும்பம் திருக்கோயிலுக்கு வந்து போதற்குச் சுரங்க வழி உண்டு. கோபுரங்களிலும் மண்டபங்களிலும், துர்ண்களிலும் பல்வேறு சிற்பங் களைக் காணலாம். நுழைவாயிலிலுள்ள இராச கோபுரம் சுமார் 100 அடி உயரம் உள்ளது. ஏழு நிலைகளைக் கொண்டது. திருக்கோயிவின் திருச் சுற்றுகளில் ஆயிரக்கணக்கான பித்தளை விளக்குகள் உள்ளன. திருவிழாக் காலங்களில் இவை எரியும். கருவறையின் முன்புறமுள்ள அர்த்த மண்டபம் 20 அடி சதுரத்தைக் கொண்டது. கல்வின் கனம் இரண்டரை அடி. இந்த ஒற்றைக்கல் மண்டபத்தி விருந்து கொண்டு மூன்று திருவாயில்கள் மூலமாக வும் தெற்கு நோக்கிய சாய்ந்த திருவபிடேகமும், வடக்கு நோக்கி நீட்டிய திருவடிகளையும் கொண்டு