பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் - gt நிற்பார்கள், அடைந்ததன் பயனான கைங்கரிய ருசியாலே எம்பெருமான் பிராட்டியோடு கூடி ஆனந்த மயமாக எழுந் தருளி யிருக்குமிடம் திருவாறன்விளை. இத்தலத்து எம்பெருமானை ஒரே திருவாய்மொழியில் (7.10) மங்களா சாசனம் செய்துள்ளார் ஆழ்வார். அங்கு சென்று அடிமை செய்ய விழைகின்றார் ஆழ்வார். இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானும் இவ் ஏழுலகை இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந்து ஆழ்கின்ற எங்கள்பிரான் அன்புற்று அமர்ந்துறை கின்ற - . அணிபொழில் சூழ்திரு வாறன்விளை அன்புற்று அமர்ந்து வலஞ் செய்து கைதொழும் நாட்களும் ஆகும் கொலோ. -திருவாய் 9.10.1 (எழில் மலர் மாதர் இலக்குமி; பிரான் உபகாரகன்; "அல்லி மலர் - மகள் போக மயக்குகளாகியும் நிற்கும் அம்மான்' (திருவாய் 3.10 : 8) என்றவாறு திருவாய், மொழியைச் செவிமடுப்பதற்கு என்றே பெரிய பிராட்டியுடன் எம்பெருமான் ஆனந்தமயமாகத் திருவாறன் விளையில் பம்பையாறு செல்லுகின்றது. கோயிலிவிருந்தே ஆற்றிற்குச் செல்லப் படித்துறை அமைக்கப் பெற்றுள்ளது. இப்படிக்கட்டுகளின் அருகிலேயே ஒரு விசாலமான இடப்பரப்பில் அர்ச்சகரின் இல்லமும் உள்ளது. இந்தச் சிற்றுாரில் பயணிகள் தங்குவதற்கு எந்தவித வசதிகளும் இல்லை. காட்டயம் என்ற ஊரில் தங்கி இக்கோயிலையும் இன்னும் சில திருக்கோயில்களையும் சேவிப்பது வசதி. எம்பெருமான்: திருக்குறளப்பன்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம்; நின்ற திருக்கோலம். இந்த எம்பெருமானை மூன்று முறை சேவித்து கிட்டுதற்கரிய பகவதநுபவம் பெற்றேன்.