பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$92 சடகோபன் செந்தமிழ் எழுந்தருளியுள்ளான். 'இன்பம் பயக்க......இவ்வேழுலகை என்பதற்கு ஈடு : "தாய் தந்தையர் இருவரும் சேர இருந்து பரியப்புக்கால் குழந்தைகட்கு ஒரு குறையும் பிறவாது அன்றோ? ஆக, இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தம் உண்டாக, அச்சேர்த்தியைக் காண்கையாலே, உலகத்திற்கு ஆனந்தம் உண்டாக, அதனைக் கண்டு குழந்தை பால் குடிக்கக் கண்டு உகக்கும் தாயைப் போலே, இவர்கட்கு உண்டான பிரீதியைக் கண்டு அதனாலே தாங்கள் இனியராய் இருப்பாராயிற்று’ (திவ்வியார்த் தீபிகை காண்க). 'திருவாய்மொழி கேட்கைக்குப் பாங்காயிருப்பதொடு தேசம் பெற்றோம்' என்று பெறாப் பேறு பெற்றாப் போலே விரும்பி எழுந்தருளியிருக்கும் தேசம் என்பது தோன்ற இனி துடன் வீற்றிருந்தாழ்கின்ற” என்கின்றார், பூம் பொழில்கள் சூழ்ந்த அத்தகைய திருவாறன்விளையை வலம் வருதல் முதலானவற்றைச் செய்து வழிபடும் நாள் எந்நாளோ? என்று பார்க்கின்றார் ஆழ்வார். இப்பாசுரத்தைத் திரு வுள்ளம் பற்றியே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இத்திருப்பதியில் விளங்கும் குணத்தை ஆனந்த வளர்ச்சி" என்று குறிப்பிட்டார். "பிரவணசித்தம் பரத்துவ விமுகம் ஆக்கும் ஆநந்த விருத்தி, நீள் நகரிலே’ என்பது சூத்திரம் (ஆசா. ஹிரு. 171) ஈண்டு விருத்திவளர்ச்சி; நீள் நகர்-திருவாறன்விளை, பிரவணம்-அன்பு; விமுகம் ஆக்குதல்-வேறு படுத்துதல் . இத்திருப்பதியின்மீது ஆழ்வாருக்குள்ள அன்பு பரத்துவத்தையும் விரும்பாதபடி செய்துவிடும் என்பதாகும். இத்திவ்விய தேச அநுபவம் பற்றி விரிவாக விளக்க இங்கு இடம் இல்லை." திருவாறன் விளை 7. மலை காட்டுத் திருப்பதிகள் - (கட்டுரை-4) காண்க,