பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் 103. என்பது பாசுரம். உணவின் பொருட்டு வந்து வந்து மேயும் குருகினங்களை நோக்கி, நீங்கள் திருவண்வண்டுர் சென்றால் அங்கும் உங்கட்குத் தேவையான ஏராளமான உணவு கிடைக்கும்' என்பதைச் செய்கொள்செந்நெலுயர்' என்ற சொற்றொடரால் குறிப்பிடுகின்றாள். எம்பெரு மானைத் தெரிந்து கொள்ள இரண்டு அடையாளங்கள் கூறு கின்றாள். இதற்கு முன்னுள்ள திருவாய்மொழியில் (5.10) 'பிறந்தவாறும்’ என்று கண்ணன் அவதாரத்தை எண்ணி மோகம் கொண்டவளாதலால் அந்த அவதாரத்தில் கையும் திருவாழியுமாகப் பிறந்தமை தன் உள்ளத்தில் ஊறியிருப்ப தனால் அவ்வடையாளத்தைக் கைகொள் சக்கரத்து என்று குறிப்பிடுவது முதல் அடையாளம் அடுத்து வளர்ந்தவாறும்’ என்று ஆயர்பாடியில் வளர்ந்த படியைக் கருத்தில் இருத்தின வளாதலால், கண்ணன் அவ்வாயர்பாடியிலுள்ள பெண். டிர்க்கு அணுக்கனாய் இருந்து கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்த படிகள் யாவும் அவளது திருவுள்ளத்தில் நிழலிட்டுத் தோற்றுகின்றன. எனவே கனி வாய்ப் பெருமான்’ என்று குறிப்பிடுவது இரண்டாவது அடையாளம். அப்பெருமான் தன்னிடம் வந்தபோது தன் னுடைய செளசீல்யம் தோற்ற இருந்தான் என்றும், பிரிந்து சென்ற பிறகு பரத்துவம் பாராட்டி நிற்கின்றான் என்றும் குறிப்பிட்டு, ஆகவே அவனைக் காணுங்கால் 'கைகள் கூப்பிச் செல்வீர் என்று விண்ணப்பிக்குமாறு வேண்டுகின்றாள். 'இன்னாள் உம்மை ஆசைப்பட்டிருக்கின்றாள்' என்று சொன்னால் போதும் என்பது அவள் திருவுள்ளம், இங்கே இன்சுவை மிக்க வன்னெஞ்சர் காதல் போலன்றிறே மென்னெஞ்சர் காதல்; மெல்லியலார் காதல் அளவல்லாத என் காதல் சொல்லீர்; சொல்லுவார் தாழ்வே' (ஈடு 6. 1: 1) என்ற ஈட்டின் பகுதி சுவைத்து இன்புறத் தக்கது.