பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் 107 திருப்புலியூர் நாயனாருடன் புணர்ச்சி உண்டானமையை அறிவிப்பின் அஃது என் காவற் சோர்வாலே நிகழ்ந்தது என்று ஏற்பட்டுவிடும். அறிவியாது ஒழியில் இவள் வாழாள். இந்நிலையில் செய்ய வேண்டியது என்ன?" என்பதாக, - . தோழி இங்கனம் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது தலைவியின் பெற்றோரும் மற்றொரும் தலைவியின் வடிவ வேறுபாட்டிற்குக் காரணம் யாதாக இருக்குமோ என்று ஆராயும் நிலையைக் காண்கின்றாள். தானும் அவர்களுடன் ஆராய்வதாகச் சேர்ந்து கொண்டு இதனை விலக்க வேண்டும் என்று உறுதி செய்கின்றாள். அந்த முறையைக் கூறுவதாக அமைந்ததே இத் திருவாய்மொழி. இஃது அகப் பொருள் நூலார் குறிப்பிடும் 'அறத்தொடு நிற்றல்’ என்பதாகும். இத்திருப்பதி எம்பெருமான்மீதுள்ள பதிகம் இதனையே கூறுகின்றது. தோழி முதலில் தன் பேச்சை இவ்வாறு தொடங்கு கின்றாள். . கருமா னிக்க மலைமேல் மணித்தடக் தாமரைக் காடுகள்போல் திருமார்வு வாய்கண் கைஉக்தி கால்உடை யாடைகள் செய்யபிரான் திருமால் எம்மான் செழுநீர்வயல் குட்ட காட்டுத் திருப்புலியூர் அருமாயன் பேரன்றிப் பேச்சிலள் அன்னை மீர்! இதற்கென் செய்கேனே? - (திருவாய் 8,9:1) (மணித்தடம் - தெளிந்த தடாகம்; உந்தி - கொப்பூழ்; கால் - திருவடி உடை - தரித்திருக்கும் செய்ய ஆடைகள் எனக் கூட்டுக! .