பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 6 சடகோபன் செந்தமிழ் கின்றனர் என்பதைத் தெளிய வைத்தருள்கின்றார்.ஆழ்வார். 'தும்தாள்கள் எம் தலைமேல் செழுமீரோ நுமரோடே' என்னும் ஈற்றடி அமைந்த அழகு மிகவும் அற்புதமானது. ஆசாரியர்கள் தம் சுற்றத்துடன் தம் தலைமீது திருவடி களை வைப்பதே பெறற்கரிய பேறு என்பதை இத்துதுப் பதிகத்தில் உயிராக வைத்திருப்பதை மலைகாட்டுத் திருப் பதிகள்’ (கட்டுரை-11) என்ற எனது பிறிதொரு நூலில் கண்டு தெளியலாம். 12. திருநாவாய்" : இத்திருத்தலம் நான்காவது பிரிவில் அமைகின்றது; தனியாகச் சேவிக்க வேண்டியது. இத்திருத் தலத்தை நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களா சாசனம் செய்துள்ளனர். ஷோரனூரிலிருந்து இருப்பூர்தியில் செல்லும் போதும், நிலையத்திலிருந்து நடந்து செல்லும் போதும் இருபுறமும் உள்ள இயற்கைக் காட்சி நம் சிந்தைக்கு விருந்தாக அமைகின்றது. சாலையிலிருந்து சுமார் 100 கெஜத் தொலைவில் உள்ளது திருக்கோயில், நம்மாழ்வார் இத்திருக்கோயில் எம்பெருமானை நாயகி நிலையிலிருந்து அநுபவிக்கின்றார். இத்திருவாய் மொழி மகள் பாசுரமாக' (9. :) நடை பெறுகின்றது. கடப்பதற்கு உறுப்பாக இருப்பது கப்பல்; நாவாய். அங்ங்னமே துன்பக் கடலைக் கடப் பதற்கு இத்திருத்தலத்து எம்பெருமானும் நாவாய் 25. திருகாவாய் இத்திவ்விய தேசம் ஷோரனூர் - மங்களூர் இருப்பூர்தி வழியில் சுமார் 25 கல் இத்ாலைவிலுள்ளது.இஃது ஒர் இருப்பூர்திநில்ையம். நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவி லுள்ளது. வண்டியொன்றும் கிடைப்பதில்லை. சில சமயம பேருந்து கிடைக்கும். நடராச் சர்வீஸில். ஆனந்தமரது நடந்து செல்லலாம். பாரதம் ւ էքfr ೯T್ಲಿಲ್ಲ ஆற்றின் கரை மீதுள்ளது இத்திருத்தல்ம். எம்பெருமான் : நாரண கம்பி, நாவாய் முகுந்தன். தாயார் : மலர்மங்கைநாச்சியார், சிறுதேவி, கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். நின்றி திருக்கேர்லம்.