பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$25 சடகோபன் செந்தமிழ் சிலப்பதிகாரத்தில், கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி வேத்திய லிழந்த வியனிலம் போல வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலங் திருகத் தன்மையில் குன்றி, முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல் பிழந்து கடுங்குதுயருறுத்துப் பாலை யென்பதேனர் படிவங் கொள்ளும்" என்ற பகுதியில் முல்லை குறிஞ்சி இரண்டு நிலம் மட்டிலும்தான் கேகடையில் திரியும் என்று சொல்லப் பட்டது. ஈண்டு நானிலமும் கோடையில் திரியும் என்று கூறியிருத்தல் காணத்தக்கது. கோடையில் சென்னைக் கடற்கரைப் பகுதி (நெய்தல்), திருநாங்கூர்ப்பகுதி (மருதம்) இவற்றைக் காணுங்கால் இத்திரிபைக் காண்லாம். நன்னிர் அறமென்று கோது கொண்ட வேனிலஞ் செல்வன்' என்ற பின் மீண்டும் சுவைத்து' என்றது சிறிதும் நீரில்லாதபடி பசையறப் பருகினமை தோன்றுதற்கு. பாலை கடந்த பொன்னே! இப்படிப்பட்ட கொடிய நிலத்தைக் காலால் நடந்து கடந்து வந்து மிக வருந்த வேண்டிய நிலையிலும் தலைவனைப் பிரியாது அவனுடன் வருதலையே ஓரின்பமாகக் கருதி, எரிகின்ற நெருப்பில் ஒட வைத்த பொன்போல ஒளி விடுகின்ற தன்மையைக் கூறி விளிக்கின்றான் தலைவன், திருமகள் போன்றவளே!’ என்றதாகவும் கருதலாம். 'கால் கிலக்தோய்ந்து விண் ணோர்தொழும் கண்ணன் வெஃகாஉது : தேவர்க்கு இந் நிலவுலகில் கால்தோயாதிருத்தல் இயல்பு: அது மாறிக் கால்நிலம் தோய்வார் எனக் கூறியது அவ்வுலகத்திலும் இத் திவ்விய தேசத்துக்குள்ள பெருமையைக் காட்ட. நிலத்தில் 5. சிலப். காடுகாண், அடி 60-66