பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் 121 கால்தோய்பவரான ம ண் ணு ல க த் தோ ரு ம் கால் பொருந்துவதற்கு அரிய பாலையின் வெப்பத்தைத் தணிக்க வல்லதான திருவெ.கன" கால்நிலம் தோயாத வரான விண்ணுலகத் தோரும் கால் பொருந்தும் படியானதென நயம் காட்டியது இன்புறத்தக்கது. அன்பு மிகுதியால் இடம்பாராது கால் தோய்வார் என்றவாறு. பெரிய திருவந்தாதியில் நம்மாழ்வார், கல்லும் கனைகடலும் வைகுந்த வான்காடும் புல்என்று ஒழிந்தனகொல்? ஏபாவும்! வெல்ல நெடியான் நிறம்கரியான் உள் புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்து அகம். - -பெரிய திருவந், 68. (கல் - திருவேங்கடம்; கனைகடல் - திருப்பாற் கடல்; வான்நாடு - வானுலகம்: புல்லென்று - அற்ப மாகி; ஏபாவம் - ஐயோபாவம்: வெல்ல - மிக) 6. திருவெ.கா : 108 திவ்வியதேசங்களுள் ஒன்று. தொண்டை நாட்டில் காஞ்சியில் தேரடித் தெருவிற் கருகிலுள்ளது. கணி கண்ணன் சொற்கேட்ட திருமழிசை பிரான் சொன்னபடி தான் செய்து "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' என்று திருநாமம் பெற்றவன் இத்தலத்து எம்பெருமான்; செளலப்பியத்திற்கு எல்லை நிலமானவன். இத் தலத்து எம்பெரும்ான் பிரமன் செய்த வேள்வியை அழிக்கவந்த வேகவதி நதியைத் தடுக்கும்பொருட்டு அதற்கு அணையாகக் குறுக்கே பள்ளி கொண்ட வனாதலால் அப்பிரானுக்கு வடமொழியில் வேகாசேது என்பது திருநாமம். அது தமிழில் வே கவணை என்று மொழி பெயர்ந்தது; அது பின் வேகணை” என விகாரப்பட்டது; பின்னர் வெஃகணை எனத் திரிந்து தானியாகு பெயராகத் தலத்தைக் குறித்தது. அது பின்பு வெஃகா என மருவிற்று என்பர். 1956 சனவரியில் முதன்முதலாக என் அருமை நண்பர் கி. சீநிவாசவரதன் என்பாரின்