பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் 129 ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும்.காம் தெழிகு நல்அரு வித்திரு வேங்கடத்து எழில்கொள் சோதிஎங்தை தந்தை தந்தைக்கே (1) (ஒழிவுஇல் ஒய்வில்லாத, உடனாய் கூட்டவே: மன்னி - நிலைபெற்று, வழுஇலா - குற்றமற்ற, தெழி குரல் அருவி - கம்பீரமான ஓசையையுடைய அருவி, எழில்கொள் - நிறம் பெற்ற) "அந்தோ! கீழே வெகுகாலம் வீணாகக் கழித்துவிட்டதே! என்கின்ற இழவு நெஞ்சில் படாதபடி அதனை மறந்து ஆனந்தமயமாகக் கைங்கரியம் பண்ணப்பாரிக்கின்றார்' என்பது இதன் கருத்து. உடனாய்’ என்பது எல்லாத் தேசங்களிலும் விடாதே தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்கின்ற பாரி ப்பை க் காட்டுகின்றது. 'ஒழிவில் காலமெல்லாம்: இதற்கு ஒர் ஐதிகம். 'ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் இத்திருவாய்மொழி பாடப் புக்கால் ஒழிவில் காலமெல்லாம், ஒழிவில்காலமெல்லாம், காலமெல்லாம் என்று இங்கனே நெடும் போதெல்லாம்பாடி, மேல் போகமாட்டாதே அவ்வளவிலே தலைகட்டிப் போவாராம் ' என்று. இதனால் அரையர் ஆழ்வாருடைய நிலைமையை அப்படியேயடைந்து கைங்கரியத்தில் தமக் குள்ள ஈடுபாட்டைக் காட்டினரென்பது பெறப்படும். திருவேங்கடத்து எழில் கொள் சோதி : இங்கு ஈட்டு பூரீசூக்தி பரமபோக்கியமானது. வானார் சோதியையும் நீலாழி சோதியையும் வ்யாவர்த்திக்கின்றது; வானார் சோல் பகல் விளக்குப் பட்டிருக்கும், நீலாழி சோதி கடல்கொண்டு கிடக்கும். வேங்கடத் தெழில்கொள் சோதி குன்றத்தி விருக்கும் விளக்காயிருக்கும். 'திருவேங்கடமேய விளக்கிறே'. روتشستية