பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - சடகோபன் செந்தமிழ் ஒர் இதிகாசம் : எம்பெருமானார் இத்திருவாய்மொழியை அருளிச் செய்யும்போது அந்தக் காலட்சேபக் குழுவில் நூற்றுக்கணக்காக எழுந்தருளியிருந்த சீடர்களை நோக்கி 'ஆழ்வார் பாசித்த குறைதீரத் திருவேங்கடமுடையான் பரி சரத்திலேயிருந்து நித்திய கைங்கரியம் பண்ணவிருப்ப முடை யார் ஆரேனுமுண்டோ?’ என்று வினவியருள, குளிரருவி வேங்கடமாகையாலே எல்லாரும் குளிருக்கு அஞ்சி விடை கூறாதிருக்க, அனந்தாழ்வான் எழுந்து "அடியேனுக்கு நியமித்தருள வேணும் என்றார். அது கேட்டு உகந்த எம் பெருமானார் நீரொருவரே ஆண்பிள்ளை' என்று போரப் பொலியக் கொண்டாடித் தழுவியருளி விடை கொடுத் தருளினர்; அது முதலாக 'அனந்தாண்பிள்ளை என்று அவருக் குப் புகழ்பரவலாயிற்று என்பது இதிகாசம், * இத்திருவாய்மொழியிலுள்ள எல்லாப் பாசுரங்களையும் உளம் உருகச் சேவித்தால் ஆழ்வாரின் கைங்கரியப் பாரிப்பு இனிதுபுலனாகும். இன்னொரு திருவாய்மொழி சரணாகதிதத்துவத்தை விளக்குவது. உலகம் உண்ட பெருவாயா 6.10) என்று தொடங்குவது. இதற்குமுந்திய திருவாய்மொழியில் (6.9). தாவி வையம் கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ? (9) என்றெல்லாம் அபரிமிதமான ஆர்த்தியோடே பரமபதத் தளவும் கேட்கும்படி, கேட்டோர் நெஞ்சம் நீராய் உருகும் வண்ணம், எம்பெருமானைக் கூப்பிடுகின்றார். இந்தக் குரல் செவிடன் காதில் ஊதிய சங்கொலி போலாயிற்று. திரு வேங்கடமலையிலே நித்தியசூரிகளோடு, நித்தியசம்சாரி களோடு, திர்யக்குகளோடு (விலங்குகள் முதலியவை) வேறு பாடு இன்றி எல்லாரும் வந்து ஒரு மிடறாக ஆச்ரயிக்கலாம் படி நித்தியசந்நிதி பண்ணியிருக்கிறபடியை அநுசந்தித்து