பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் - F39 எண்டி சையும் கீழும் மேலும் முற்றவும் உண்டபிரான் தொண்ட ரோமாய் உய்ய லல்லால் இல்லைகண் டிர்துணையே(:) tகொண்ட பெண்டிர் - மனைவி, கண்டதோடு - கையில் காசு, கண்டபோது, பட்டது - தேசித்தது; காதல் அன்பு; தொண்டர் - அடியார்) ஒரு காரணத்தினால் வந்த உறவினர்களை ஒளபாதிக பந்துக்கள் என்றும், காரணமின்றி வரும் எம்பெருமான் "நிருப்ாதிக பந்து என்றும் சொல்லப் பெறுவர். முன்னவர் கையில் காசு. கண்டபோது மட்டிலும் அன்பு காட்டுவர். ஆகவே இவர்களை விட்டொழித்து நிருபாதிக பந்துவான எம்பெருமானைப் பற்றி உய்வதே உற்றதாகும். துணையும் சார்வும் ஆகு வார்போல் சுற்றத் தவர்.பிறரும் அணைய வந்த ஆக்க முண்டேல் அட்டைகள் போல்சுவைப்பர் கனையொன் றாலே ஏழ்மரமும் எய்த எங்கார் முகிலல. புனையொன் றுய்யப் போகல் - அல்லால் இல்லைகண் டிர்பொருளே.(2) சுற்றத்தவர் - தாயாதிகள்: அணைய வந்த - கைக்கு, எட்டின கணை - அம்பு கார்முகில் கரிய மேக. நிறத்தவனான எம் பெருமான்) இதில் உபகாரரைப் போலே இருந்து தம்தம் காரியங் களையே தலைக்கட்ட நினைக்கும் நம்பத்தகாதவர்களை ஒழிய, காரணம் இல்லாமலே இயல்பாகவே நம்பிக்கையை விளைவிக்குபவனாய் ஆபத்துக்குத் துணைவன்.ஆனவனைப் பற்றுவது அன்றிப் பயன் இல்லை என்கின்றார். -