பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சடகோபன் செந்தமிழ் பற்றுங்கள் என்கின்றார். இந்தத் திருவாய் மொழி முழுதும் உளங்கரைந்து ஒதுதல் வேண்டும்; பகவததுபவம் பெறுதல் வேண்டும். இவை தீது இலாத ஒண்தமிழ்கள் 4. திருப்பாற்கடல்” . இத்திருத் தலத்தைப்பற்றித் திருவாய்மொழியில் 13 பாசுரங்களும், திருவிருத்தத்தில் ஒரு பாசுரமும், பெரிய திருவந்தாதியில் இரண்டு பாசுரங்களும் உள்ளன. இந்த எம்பெருமானைப்பற்றி நம்மாழ்வார் கூதுவது: பு:வாழி கிேடக்கும் பண்பையாம் கேட்டேயும் காலாழும் கெஞ்சழியும் கண்சுழலும்-லோழிச் சோதியாய்! ஆதியாய்! தோல்வினைஎம்.பால்கடியும் திேயாய்! கிற்சார்ந்து - கின்று. 二。 。 -பெரி. திருவந் 34, (பால்ஆழி - திருப்பாற்கடல்; ஆழும் தடுமாறும்; நீலாழி - நீலக்கடல்; சோதி - நிறம் சார்ந்து நின்று - அணுகி, 12. திருப்பாற்கடல் இத்திருத்தலம் வடதுருவத்திற்கு அப்பால் உள்ளதாகச் சொல்லப் பெறுகின்றது. மனிதர்கட்கு எட்டாத இடம் இது. வடகடலைச் சேவித்தே மன நிறைவு பெறவேண்டியதுதான். குக்கும உடலைக் கொண்டவர்கள்தாம் இந்த இடத்திற்குச் சென்று அடைதல் முடியும்; தேவர் கள், பண்டைய முனிவர்கள். _யோகியர் இவர் களைப் போன்ற பிறர் இந்த இடத்திற்குச் செல் லுதல் கூடும். நான்முகன் மூலம் இவர்களின் குறை. களைக் கேட்டு அவற்றைத் தீர்ப்பதற்காகவே பரமபத நாதன் வியூக நிலையில் இங்கு எழுந்தருளி புள்ளான் அடியார்கள் பொருட்டு அவதாரங்கள் எடுக்கும் இடமும் இதுதான். இந்தப் பாற்கடலைக்