பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் H 45 பதுமநாபன், தாமோதரனாகவும் பிரிவர். இவர் கள் பன்னிரண்டு ஆதித்தர்களாக நின்று பன்னி ரண்டு திங்கள்களின் தலைவர்களாகப் பன்னிரண்டு திசைகளில் வீற்றிருப்பர். இவர்களின் அறிகுறியாகத்தான் வைணவர்கள் தமது திருமேனியில் திருமண் காப்பினை (புண்டரத்தை) இட்டுக் கொள்வர். இவர்கள் மரணமாகும் வரையிலும் திருமேனியைக் காப்பர் என்பது வைணவர்களின் நம்பிக்கை. திருவாய்மொழியிலுள்ள பன்னிரு திரு நாமப் பாட்டும் (திருவாய் 2.7 தேசிகப் பிரபந்தத்திலுள்ள "பன்னிரு நாமம் (தே.பி. 280.292) என்ற சிறு பிரபந்தமும் இந்தப் பன்னிரு எம்பெருமான்களைப் பற்றியவை. திருமண் தரித்துக் கொள்ளும்போது இந்தப் பாசுரங்களை அநுசந்திப்பது வழக்கம். இதனால் இறைவன் திருவடிப்பேறு கிட்டும் என்பது வைணவர்களின் நம்பிக்கை. அறிவியல் கருத்துப்படி திருப்பாற்கடலைப் பாலோடை (Milky way) எனப்படும் விண்மீன்களின் கூட்டத்தைத் தான் பண்டையோர் பாற்கடல் என வழங்கியதாகக் கருதலாம். இப்பாற்கடலின் தனிச்சிறப்பு இன்றும் அறிவியலறிஞர் களிடையே ஒரு புதிராகவே உள்ளது. பேரண்டத்தில் வேறெங்கும் நடைபெறாத ஒரு திருத்கூத்து இங்கு நை பெற்று வருவதாகக் கருதுகின்றனர் அவர்கள் மற்ற இடங்களிலெல்லாம் ஒரு பொருள் உருமாறி வேறொரு பொருளாகுமேயொழிய சூனியத்திலிருந்து ஒரு பொருள் உண்டாவதில்லை. ஆனால் பாலோடை மாத்திரம் இதற்கு விதிவிலக்காகும் என்பது அறிஞர்களின் கருத்தாகும். வெறும் பாழிலிருந்து அதாவது இன்மையிலிருந்து நீரிய அணுக்கள் (Hydrogen atoms) பாலோடையில் எப்படியோ படைக்கப் பெறுகின்றன. இது விளங்காப் புதிராக இருப்பதாகவே அவர்கள் கருதுகின்றனர். இந்த இடத்திலேயே பதுமநாபன் கொப்பூழில் நான்முகன் தோன்றி உலகத்தையும் பிறவற்றை யும் படைத்தான் என்பது கொள்கை, - - 9ة يسستي