பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#45 சடகோபன் செந்தமிழ் நம்மாழ்வாரின் முதற்பிரபந்தமாகிய திருவிருத்தத்தில் ஒரு பாசுரம்: * - - - வேதனை வெண்புரி நூலனை விண்ணோர் பரவகின்ற காதனை ஞாலம் விழுங்கும் அகாதனை ஞாலம்தத்தும் பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும் சீதனை யேதொழுவார் விண்ணு ளாரினும் சீரியரே (79) (வேதனை - வேதத்தில் வல்லவன்; அநாதனை ஒரு தலைவன்ை; ஞாலம் உலகம்; தத்தும் - அளந்த; அணை படுக்கை) இது நாயகனைப் பிரியாத பேறு பெற்ற மகளிரின் சிறப்பைக் கூறித் தலைவி இரங்கும் பாசுரம். இதில் திருப்பாற்கடலில் பாம்பணையின்மீது அறிதுயில் கொள்ளும் எம்பெருமானை இடைவிடாது வணங்கி அநுபவிப்பவர் எவரோ அவர் பரமபதத்தில் வாழும் நித்திய முத்தர்களைக் காட்டிலும் சிறப்புடையராவர் என்கின்றார் ஆழ்வார். நாயகனுடைய பிரிவிலே தனித்து மிகவும் வருந்துகின்ற தாயகி, தன்னையாற்றுவிக்கின்ற தோழியை நோக்கி, "நாயகனைப் பிரியாமல் அவனுடன் என்றும் கூடி வாழ்கின்றவர் முத்தியுலகில் பேரின்பம் நுகர்வாரினும் - சிறப்புடையவராவர்” என்று கூறிய இதனால், அப்படிப் பட்ட பேற்றை யான் பெற்றிலேனே' என்று தன் ஆற்றாமை மிகுதியை வெளியிடுகின்றாள். பெரிய பிராட்டியாரும் பூமிப் பிராட்டியாரும் ஒருகாலும்விட்டுப் பிரியாது திருவடி வருடிக் கூடிக் குலவி இன்புற அவர்களுடன் அறிதுயில் அமரும் தன்மையை பாற்கடலில் பாம்பணைமேல் பள்ளி