பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் 147 கொண்டருளும் சீதனை' என்றதனால் குறிப்பிட்டு அப்படிப் பட்ட இடையீட்டில்லாப் போகம் தமக்குக் கிடைக்கா மையைப்பற்றிப் பொறாமையும் வருத்தமும் கொள்ளு கின்றாள் பராங்குச நாயகி. இடைவிடாது பகவநுபவம் செய்வதற்கென்றே வாய்த்த இடம் பரமபதம். இதற்கு எவ்விதமான இடையூறும் அங்கில்லை. அங்கிருந்து கொண்டு பகவானை அநுபவித்தல், வியப்பன்று: உண்டியே உடையே உகந்தோடும் இம்மண்டலம் (பெரு. திரு. 4) பகவநுபவத் திற்கு நேர்விரோதியாதலால் அப்படிப்பட்ட இந்த இருள்தரு மாஞாலத்திலிருந்து கொண்டே அங்ஙனம் நித்தியாநுபவம் செய்தலில் மிக அருமையுண்டாதலால் அவ்வருமையைப் போக்கி எம்பெருமானை இடைவிடாது அநுபவிக்குமவர் களை நித்திய முக்தர்களினும் மேம்பட்டவராகக் கூறத் தடையுண்டோ? ஒரு சிறந்த காரியத்தைப் பிரதிபந்தகம் இல்லாத இடத்தில் தலைக்கட்டுதற் காட்டிலும் பிரதிபந்தகம் மலிந்த விடத்தே தலைகட்டுதல் வியக்கத்தக்க தன்றோ? எம்பெருமான் பக்கம் ஈடுபாடு கொண்ட ஆழ்வார் (நாயகி) மற்றொன்றில் சிந்தை செலுத்தாது அப்பெருமானையே மனம் மொழிமெய்களால் பூர்ணாநுபவம் செய்யப்பெற்றவர் இவ்வுலகத்திலிருந்து கொண்டே நித்திய சூரிகளிலும் 14 இன்றைய சூழ்நிலையில்-அதாவது ஆபாசப் படக்காட்சிகள், ஆபாச நாவல்கள், சிறுகதைகள், ஆபாச விளம்பரங்கள், ஆபாசச் சுவரொட்டிகள் - போன்றவற்றைப் பார்த்துக் கொண்டும் படித்துக் கொண்டும் கல்லூரியில் பயின்றுவரும் முன்- குமர, குமரப்பருவ இளைஞர்கள் இவற்றையெல்லாம் இயன்றவரை ஒருவாறு புறக்கணித்துத் தம் கல்வி யில் மிக்க ஊக்கம் செலுத்திச் சிறப்பாகத் தேர்ச்சி பெறுவதை ஒப்பிடுக. இத்தகைய மாணவர்கள் இவ்வுலகில் இடைவிடாது பகவதநுபவம் பெறுபவர் களுடன் எல்லாவகையிலும் ஒப்பாவர் என்பதை நினைவு கூர்க.