பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் fog இவை முறையே துணைக் காரணம், முதற் காரணம், நிமித்த காரணம் தவிர வேறு இன்மையைக் காட்டுகின்றன, இந்த மூவகைக் காரணங்களும் எம்பெருமானே என்று. கொள்ள வேண்டும். அதுபோலவே, இப்பாசுரத்தில் தான், ஒர், தனி என்னும் மூன்று சொற்கள் (முதல் அடியில்) உள்ளன. இவற்றுள் தான் என்பதனால் முதற்காரணம் (உபாதான காரணம்) இன்மையும், ஒர் என்பதனால் துணைக் காரணம் (சகஹாரி காரணம்) இன்மையும், 'தனி' என்பதனால் நிமித்த காரணம் இன்மையும் பெறப்படு கின்றன. மூன்று காரணமும் இறைவனே என்பது அறுதி யிடப் பெறுகின்றது, இதனை மேலும் விளக்குவோம். குக்கும சித்து அசித்தோடு கூடியிருக்கின்ற தன்மையால் முதற்காரணமும், சங்கல்பத்தோடு கூடியிருக்கிற தன்மை யால் திமித்த காரணமும், ஞானம், சக்தி முதலிய குணங் களோடு கூடியிருக்கின்ற தன்மையால் துணைக்காரணமும் ஆக மூன்று காரணங்களும் இறைவனே ஆவான் என்பது தெளிவாகின்றது. கம்பநாடன் இக்கருத்தினையே, உற்றொரு தனியே தானே தன்கனே உலகம் எல்லாம் பெற்றவன் - . -கம்ப, யுத்த வருணன்ை.63 என்ற பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது ஈண்டு ஒப்புநோக்கி உணர்த்தக்கது. தன்னில் மூவர்.முற்றுமாய் : தன்னுடைய சங்கல்பமா கின்ற சொரூபத்திலே மூவராக நின்றவர்கள் பிரமன், சிவன், இந்திரன். இவர்களுடன் தேவர்கள், சனகாதி முனிவர்கள், நிலைத்தினைப் பொருள்கள், இயங்கு திணைப்பொருள்கள், இன்னமும் சொல்லப் பெறாதவைகள் ஆகியவற்றை உண்டாக்குகைக்காக 'மூவர் முதலாய வானோர் பலரும்