பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 சடகோபன் செந்தமிழ் முனிவரும் மற்றும் மற்றும் முற்றும் தன்னில் ஆய்’ என்று கொண்டு கூட்டி பிரமன், சிவன், இந்திரன் முதலான தேவர் கள் முதலான எல்லாமும் தானேயாகி என்றும் உரைக்கலாம். உலகத்தில் கப்பும் கிளையுமான மரம் ஒருசிறிய விதையினுள் சூக்குமமாக உள்ளது என்ற கொள்கைப்படி காரிய நிலையில் மறுஉருவமாகத் தெரிகின்ற எல்லாப் பொருள்களும் காரண நிலையில் சூக்கும உருவமாக உள்ளனவாதலின் இங்ங்னம் சொல்லுவதில் தவறு இல்லை. இதனால் முன் இரண்டு அடி களிலும் எம்பெருமானுடைய காரண நிலை கூறப்பெற்ற தாகக் கொள்ள வேண்டும். "தானோர் பெருர்ே தன்னுள்ளே தோற்றி அதனுள் கண் வளரும் இப்படிப் படைப்பில் ஒருப்பட்ட தான் தனக்குக் கண் வளருகைக்காகப் போதும்படியான படைப்பை யுடைத்தான ஒரு பெருங்கடலைத் (ஏகார்ணவத்தைத்) தன் பக்கல் நின்றும் உண்டாக்கி அதனுட் கண் வளரும். இப்படிப் பெருங்கடலில் சாய்ந்தருளுகின்றவன்தான் யார் என்னில்: ‘இவன் நித்தியசூரிகட்குத் தலைவன். ஆச்சரியமான குணங் களையும் செயல்களையும் உடையவன். திருநாட்டைக் கொலு வீற்றிருக்கும் இடமாக உடையவன். அவன்தான் வைகுந்தன்; அவன் என் தலைவன்’ என்கின்றார். வடநாட்டுத் தலங்கள் பற்றிய இக்கட்டுரையில் திருவெஃகாவும் (தொண்டை நாடு), திருநாடும் (பரமபதம் அடக்கப் பெத்துள்ளன என்பது நினைவு கொள்ளத்தக்கது.