பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. அருளிச் செயல்கள் உயர்வறி உயர்நலம் உடையவனால் மயர்வற. மதிநலம் அருளப்பெற்ற ச்டகோபன் என்னும் நம்மாழ்வார் அருளி செய்த பிரபந்தங்கள் நான்கு அவை திருவிருத்தம் திருவாசிரியம், பெரிய திருவந்தாதி (இயற்பாவில் அடங்கி யுள்ளவை), திருவாய்மொழி என்பவை. இந்த நான்கும் முறைய்ே இருக்கு, யகுர், அதர்வனம், சாமம் என்ற நான்கு வேதங்களின் சாரம் என்று வழங்குவர் பெரியோர். இது, இயற்பா மூன்றும் வேதத்சயம் போலே - * பண்ணார் பாடல் புண்புரை இசை கொள் வேதம் போலே -ஆசா. ஹிரு 50 (த்ரயம் - மூன்று; - என்ற குத்திரத்தால் அறியப்படும். திவ்வியப் பிரபந்தத்தின் பிரிவு நான்கனுள் இயற்பா என்னும் பிரிவினுள் சேர்ந்திருப் பவை யாகியதிருவிருத்தம்,திருவாசிரியம்,பெரியதிருவந்தாதி என்னும் பிரபந்தங்கள் முதல் மூன்று வேதங்களின் தானத் தில் கோடல் வேண்டும். பண்ணார் பாடலாகிய (10.7 : 5) திருவாய்மொழியை சாம வேதத்தின் தானத்தில் கோடல் வேண்டும். பண்புரை வேதம்', 'இசைகொள் வேதம்’ என்னும் தொடர்கள், பண்ணார் பாடல் என்கின்றபடியே திருவாய்மொழி பண்ணையும் இசையையும் உடைத்தாகை யாலே சாமவேதத்திற்குப் பண்ணும் இசையும் உண்டு என்பதனை அறிவிக்கின்றன. x