பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 157 விருத்தம் என்று திருநாம்ம் பெற்றதாகச் சிலர் கருதுவர்; வடமொழியில் செய்யுளைக் குறிக்கின்ற வ்ருத்தம் என்கின்ற பொதுமொழி, இங்கே சிறப்பாய்க் கட்டளைக் கவித்துறை என்னும் ஒருவகைச் செய்யுளை உணர்த்தி நூலுக்குக் கருவியாகு பெயராயிற்று என்பது இக்கொள்கையின் தேர்ந்த கருத்து. தாழிசை, துறை, விருத்தம் என்ற பாவின் இனம் மூன்றனுள் ஒன்றாகிய துறையின்பாற் படும் கட்டளைக் சலித்துறையா லாகிய நூலை விருத்தம் என்பது பொருந்துமோ என்ற ஐயம் உண்டாகக் கூடும். ஆனால் இங்கு விருத்தம் என்னும் சொல் அவ்வினம் ஒன்றை உணர்த்துவதன்றிச் செய்யுட் பொதுப் பெயராகக் கொள்ளப் படுதலால் கட்டளைக் கலித்துறையாலாகிய நூலை விருத்தம் எனலாம் என்று ஒப்புமை சொல்லி விடக் கூடு மாயினும், செய்தி என்று முன் சொன்ன பொருளே சிறக்கும். இங்கின்ற நீர்மை இனியாம் 霍-玛留磁ü............. . عے* மெய்க்கின்று கேட்டருளாய் அலங்ை செய்யும் விண்ணப்புமே (1) என்று தம்முடைய செய்தியைக் கூறுவதாகவே தொடங்கும் சுவாரஸ்யத்தை நோக்கியே நம்பூருவ ஆசாரியப் பெருமக்கள் இதற்குத் திருவிருத்தம் என்று திருநாமம் சாற்றினர் என்பது கருதத்தக்கது. அன்றியும், இப்பிரபந்தத்தில் பெரும்பாலும் (முதல், இறுதிச் செய்யுட்களைத் தவிர) ஆழ்வார் பிராட்டியார் நிலையை ஏறிட்டுக் கொண்டு தமது விருத்தத்தைக் விருத்தாந்தத்தைக் - கூறுகின்றாராதலின், திருவிருத்தம் என்பதற்குத் திருமகளின் நிகழ்ச்சியைக் கூறும் நூல் என்று பொருளாகலாம் என்றும் சிலர் கருதுவர். முதல், இறுதிச் செய்யுட்களைத் தவிர ஏனைய 98 செய்யுட்களும் வெளிப் படைப் பொருளையும்(அந்யாபசேம்)