பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#58 சடகோபன் செந்தமிழ் உள்ளுறைப் பொருளையும் (ஸ்வாப்தேசம்) ஆகிய இருவகைப் பொருளைக் கொண்டவை. சொற்செறிவு, பொருட் பொலிவு, ஆழ்ந்த கருத்து, தொனிப் பொருள், கற்பனை அலங்காரம். முதலிய சிறப்புகளாலும் ஒப்புயர்வின்றி விளங்குவது. தன்னைக் கற்பார்க்குப் பிறவித் துயரறுத்து அந்தமில் பேரின்பம் அளிக்க வல்லது. எப்பெருமானை அகப்பொருள் நெறியில் அநுபவிக்குந் திறத்திற்கு வழி காட்டியாயுள்ளது (இதனைப் பிறிதோர் இடத்தில் விளக்கு வோம்). மணிவாசகப் பெருமானின் திருக்கோவையாரும் இந்த நூலும் ஒரு தன்மையாக இருக்கும் எனலாம். இப் பிரபந்தம் முமுட்சுத்துவத்தையும் முக்தியையும் உண்டாக்கு வதற்கு ஏற்றது. இப்பிரபந்தத்தில் ஒரு பாசுரத்தைக் காட்டி விளக்குவேன். "இசை மின்கள் தூதென் றிசைத்தால் இசையிலம்; என்தலைமேல் அசைமின்கள் என்றால், அசையும் கொலாம் அம்பொன் மாமணிகள் -- - திசைமின் மிளிரும் திருவேங் கடத்துபவள் தாள்சிமயம் மிசைமின் மிளிரிய போவான் வழிக்கொண்ட மேகங்களே (31) இசைமின் ஒப்புக் கொள்ளுங்கள்; இசைத்தால் வேண்டினால், இசையிலம் - உடன்பட்டுச் செல் விதைக் காண்கின்றோம் இல்லை; அசை மின் - பொருந்துமின்: அசையும் கொலோ செல்லக் கடுமோ? அம்பொன் - அழகிய பொன்; மின் மின்னல்: தாள் - அடிவாரம், சிமயம் - சிகரம்; மிளிரிய - விளங்கச் செல்லும், வழிக்கொண்ட பயணப்பட்ட -- - - - -