பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iós] சடகோபன் செந்தமிழ் யாரேனும் எங்சேனும் வழி நடந்து சென்றாலும் திவ்விய தேசங்களுக்கு யாத்திரை செல்வதாகவே நினைப்பது ஆழ்வாரது தொழிலாம். . வருவார் செல்வார் வண்பரி சாரத்து இருந்தனன் திருவாழ் மார்பற்கு என்திறம் சொல்லார் செய்வதுனன் --திருவாய் 8. 3. 7 என்பர் திருவாய் மொழியிலும். வழியே சொந்த காரிய மாகச் செல்பவர்கள் எல்லாரும் திருவண் பரிசாரம் என்னும் திருப்பதிக்குச் செல்வதாக வன்றோ பாவனை நிகழ்ந்தது? தாதுவிடற்கு உரியதைத் தன் தலைமேல் அடி வைத்துச் செல்லுமாறு வேண்டுதலை, - . எங்கானல் அகங்கழிவாய் இரைதேர்ந்துஇங்கு இணிதமரும் செங்கால மடகாராய்! திருமூழிக் களத்துறையும் கொங்கார்பூர் துழாய்முடிஎம் குடக்கூத்தர்க்கு என்துதாய் துங்கால்கள் என்தலைமேல் கெழுமீரோ நுமரோடே -திருவாய் 9.7 : 1 ,என்ற திருவாய்மொழிப் பாசுரத்திலும் காணலாம். ஸ்வாபதேசப் பொருள் (உள்ளுறை) ; கீழ் எம்பெருமான் பக்கல் ஆழ்ந்த நெஞ்சை மீட்கும்படி வேண்டப்பட்டவர்கள் ‘இவர் நெஞ்சை மீளச் செய்வது சர்வசக்தனான அவ்வெம் பெருமானுக்கும் அசாத்தியமானதொன் றானால் நம்மால் செய்யலாவதோ? என்று கைவிட, பின்பு ஆழ்வார் திவ்விய தேச யாத்திரைபராய்த் திருமலையை நோக்கிச் செல்கிற சிலரைக் கண்டு, இவர் நம் குறையை எம்பெருமான் பக்கல்