பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvii யிலும், இந்நூல் நம்மாழ்வாரின் பக்தியில் விளைந்த பாசுரங் களை விளக்குகின்றது. ஆக, இந்தப் பார்வையில் வழிவழி யாக வைணவ நெறி பேணி வரும் அடிப்படையை இலக்கிய வழியாக்கி, நூல் உருவாகியிருப்பதை உணரலாம். இதைச் சற்றே விளக்க விரும்புகின்றேன். வைணவநெறி நிற்போர் பிரமாணம் (ஆதாரம்), பிரமேயம் (சொல்லப்படும் பொருள்), பிரயாத (ஆதாரம் கொண்டு பொருளை அளந்தறியவன்) என்ற மூன்றம்ச அடிப்படையில் தம் கொள்கைகளை வகுத்துக் காட்டுவர். அதன்படி, தென்புலத்து வைணவ நெறியில் அடிப்படைச் சட்டம், தமிழ் வேதங்களான திவ்வியப் பிரபந்தங்களே. அவற்றிற்கு இந்நெறியினர் அளித்துள்ள தமிழ் இலச்சினையே அருவிச் செயல்கள்’ என்ற பெயர். ஒரு காலம் செல்வாக்கோடு எல்லா நிலைகளிலும் பயன் பெற்றுப் பின், சில் காலம் மறைந்த அல்லது விடுபட்ட தமிழ் மறைகளை மறுபடியும் தம் நிலையில் குறைவில்லாமல் வடமொழி மறைக்கு மேலாகப் பயன்படும்படிச் செய்தவர் மணவாள மாமுனிகள் என்ற ஆசாரியர். இம்மணவாள மாமுனிவன் தோன்றாவிடில் ஆற்றில் கரைத்த புளியலவோ தமிழ் ஆரணங்கள்' என்று வைணவத் தமிழ்ப் பக்தியுலகு பெருமையோடு கேட்கும். அந்த மாமுனிகளின் மங்களா சாசனத்தினை - வாழ்த்தினைப் - பலமாக்கிக் கொண்டன அருளிச் செயல்கள். மாமுனிகளின் குரல் வாழ்த்தியது: ஆழ்வார்கள் வாழி அருளிச்செயல் வாழி தாழ்வாதுமில் குரவர் தாம்வாழி - ஏழ்பாரும் உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம்வாழி! செய்யமறை தன்னுடனே சேர்ந்து. ஆக, அருளிச் செயல்களே, அவை தோன்றிய காலத்தி விருந்தே தென்புலத்து வைணவ நெறியின் பிரமானம் (ஆதாரம்) ஆயித்து. B