பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணப்பம் செய்து நம்மை அவனோடு சேர்ப்பதற்கு ஏற்ற புருஷகாரமாவர் என்று கருதி அவர்களை ஆசாரியராக வரிக்க, அவர்கள் இவர்க்கு ஆசாரியராவதற்கு உடன் படாமையால், * எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என்தலைமேலாரே (பெரி. திரு. 1.4 : 1) என்னும் படி இவர் நம் சிரசின்மேல் திருவடிகளை வைப்பதும் புருஷார்த்தமாகும் என்று அதனை வேண்டுகிறபடி, கருவிருத்தக் குழித்தபின் காமக் கடுங்குழி வீழ்ந்து ஒருவிருத்தம் புக்குழ லுறு வீர்! உயிரின் பொருள்கட் கொருவிருத்தம் புகுதாமல் குருகை யர்கோன் உரைத்த திருவிருத்தத் தோரடி கற்றிரீர் திருகாட் டகத்தே" - தனியன் :கரு - கர்ப்பம்; விருத்தம் - வட்டமான; காமம். சிற்றின்பம்; விருத்தம் - கிழத்தனம், உழலுவீர் - அலைவீர்: பொருள்கள் பயன்கள்; விருத்தம் . இடையூறு: புகுதாமல் நேரிடாதபடி; திருநாடு - பரமபதம்} - என்ற பாடல் இப்பிரபந்தத்தின் சிறப்பினை வலியுறுத்தும். 2. திருவாசிரியம் : இஃது ஆழ்வாரின் இரண்டாவது பிரபந்தம், திருவிருத்தமாகிய முதல் பிரபந்தத்தில் ஆழ்வார் தமது ஞானக்கண்ணுக்கு இலக்கான எம்பெருமானை நோக்கி :தேவரீரை அநுபவித்தற்கு இடையூறாக இருக்கும் உடல் தொடர்பை அறுத்துத் தந்தருள வேண்டும்' என்று விடுத்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இவரைக் கொண்டு 2. கிடாம்பியாச்சான் அருளியது. - في 1 سد تھ