பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 15 மீதேறி திருக்கண் வளர்ந்தருள்கிறபடிக்கு எடுத்துக் கர்ட்டாக வருணிக்கப் பொருத்தமான உவமையொன் றில்லாமையால் இல்பொருள் உவமையொன்றைக் கையாளு கின்றார். மரகதப் பச்சையான ஒருமலை செந்நிறமான மேகத்தைப் பிதக ஆடையாக உடுத்திக்கொண்டும், கிரீடத்தின் இடத்தில் சூரியனை அணிந்து கொண்டும், கண்டிகை இடத்தில் சந்திரனை அணிந்துகொண்டும், முத்துச்சரம் முதலான மற்றும் பல திருவாபரணங்களின் இடத்திலே நட்சத்திரங்களைப் புனைந்து கொண்டும். திருவதரம் திருக்கண்களின் இடத்தில் பவளமயமான பிரதேசங்களைக் கொண்டும் ஒரு கடலில் பள்ளி கொண் டிருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிராநின்றது எம்பெருமான் திருக்கோலத்துடன் பள்ளிகொண்டிருக்கும் நிலை-என்கின்றார். இங்கு எம்பெருமான் உபமேயம் : மலை உவமானம்; பீதாம்பரம்-உவமேயம்: செக்கர் மாமுகில் உவமானம். திருமேனியழகிலும் அறிதுயில் கொண்ட அழகிலும் இந்த ஆழ்வார் நெஞ்சைப் பறிகொடுத்துவிட்டா ராகையாலே ஒரு வினைமுற்றுடன் பாசுரத்தை முடிக்க முடியாமல் மூவுலகளந்த சேவடி யோயே! என்று கண்ணாஞ் சுழலையிட்டுக் கிடக்கின்றார். அடுத்து, மிக்க அழகிய எம்பெருமானின் இணைத் தாமரை அடிகளைப் பேசி அவற்றைத் தம் சென்னியில்குட வேண்டும் என்ற ஆவலைக் காட்டுகின்றார் (2), தொடர்ந்து பாகவதபக்தியின் பெருமையை எடுத்துரைக்கின்றார் (3). பாகவதர்கள் எம்பெருமான் திருவடிகட்கு மங்களாசாசனம் செய்துகொண்டிருப்பதைக் கண்டு அப்படிப்பட்ட பொழுது போக்குப் பேறு தமக்கு வாய்க்குமா என்கின்றார் (4). எம்பெருமான் உலகமளந்த சரிதையை அதுசந்தித்து அதில் அமைந்த செளலப்பியம், செளசீல்யம் முதலான திருக்குணங் களில் ஈடுபட்டுத் தம்மை மறக்கின்றார் (5) உலகளந்தானின்