பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 சடகோபன் செந்தமிழ் திருவடிகளை வணங்கி வழிபடாமல் சிறுதெய்வங்களை ஆராதிக்கும் அதிகமான மக்களைக் கண்டு அவர்கள் மீது கழிவிரக்கம் கொள்ளுகின்றார் (6). சம்சாரிகள் திருந்தாத நிலையைக் கண்டு இவர்கள் எக்கேடாவது கெடட்டும்: என்று அவர்களைக் கைவிட்டுத் தாம் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருத்தலை நினைந்து மகிழ்கின்றார் (7). இப்பாசுரங்களின் அந்தாதி அமைப்பில் முடிவுப் பாசுரத்தின் அந்தமும் முதற்பாசுரத்தின் ஆதியும் மண் கூலித்து அமையாததால் சில பாசுரங்கள் மறைந்திருத்தல் கூடும் என்று கருதுவர் சிலர். இதனைப் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள் ஒப்புக்கொள்ளவில்லை.இவர் இப்பிரப்பந்தம் பூரணத்துவம் பெற்றதாகவே கொள்வர். காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து ஆசிரியப் பாவதனால் அருமறைநூல் விரித்தானைத் தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத் தாரானை மாசடையன மனத்துவைத்து மறவாமல் வாழ்த்துதுமே” -தனியன் (காசினி உலகம், உதித்து - அவதரித்து; மறைநூல் - வேதசாத்திரம்; தேசிகன் - ஆசாரியன்; பராங்குசன்நம்மாழ்வார்; மாசு - குற்றம் (அகங்காரம், மமகாரம்)) என்ற தனியனால் இ ப் பிர ப ந் த த் தி ன் பெருமை எடுத்துரைக்கப் பெறுகின்லது. - 3. பெரிய திருவந்தாதி : இஃது இயற்பாத்தொகுதியில் ஏழாவது பிரபந்தமாக அடைவு செய்யப் பெற்றுள்ளது. 4. அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அருளியது,