பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செய்ல்கிள் 馨6勢。 அடியால் படிகடந்த முத்தேரி அதன்றேல் முடியால் விசும்பள்ந்த முத்தோ-டிெயாய்! செறிகழல்கொள் தாள்கிமிர்த்துச் சென்றுலக - மெல்லாம் அறிகலமால் நீ அளந்த அன்று{27) |நெடியாய் - திரிவிக்கிரமனே: படிகடத்தல் - அளத்தில்: முடி - திருமுடி; முத்து- மகிழ்ச்சி, அழகு) இதற்குமுன்னர் உள்ள பாகரத்தில் யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் என்று ஆழ்வார் கூறியதைக் கேட்ட எம்பெருமான், இப்படி ஒரு பாசுரம் செவிப்படுவது அற்புதமே!’ என்று கொண்டு பெரு மகிழ்ச்சியுற்றான். இதனைத் தன் ஞானக் கண்ணாலே கண்டறிந்த ஆழ்வார், ‘எம்பெருமானே! இப்போது நின் திருவுள்ளத்தில் ஒடுகின்ற மகிழ்ச்சிப் பெருக்கு “பண்டு உலகளந்த காலத்து உண்டான மகிழ்ச்சிப் பெருக்கோடு ஒக்குமோ? அன்றி அதன்னும் மேம் பட்டதோ?’ என்று வினவுகின்றார் போலும் நெடியாங்! நெருங்கின வீரத் தண்டைகளை அணிந்துள்ள திருவடிகளை நீட்டி உலகங்களை அளந்த காலத்தில் திருவடியாலே பூமிப் பரப்பை யெல்லாம் அளந்து சொந்தமாக்கிக் கொண்டதனால் ஒரு மகிழ்ச்சியும், திருமுடியை நிமிர்த்தி மேலுலகங்களையெல்லாம் அளாவிச் சொந்த மாக்கிக் கொண்டதனால் ஒரு மகிழ்ச்சியும் ஆக இரண்டு மகிழ்ச்சிகள் 'உண்டாயின; அவற்றுள் எந்த மகிழ்ச்சியோடொக்கும் இப்போது நீ அடையும் மகிழ்ச்சி: வடமொழியில் முத் என்பது.சந்தோஷத்திற்குப் பெயர்: அச்சொல்லே இங்கு முத்துமகிழ்ச்சி என்றாகியுள்ளது. இவ்விடத்தில் ஒர் ஐயம் எழுகின்றது. மேலே நீட்டப் பெற்ற ஒரு திருவடியே மேலுலகங்களையெலாம் அளந்ததாக அருளிச் செயல்களில் சொல்வியிருக்க முடியால் விசும்பளந்த என்று.இங்கு இவர் அருளிச் செய்தது பொருந்துமா? என்பது