பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii ஆழ்வார்கள் அனைவருமே அர்ச்சாவதாரத்தில்ே ஈடு பட்டவர்கள். திருக்கோயில்களில் உறையும் உருவத் திருமேனியே அவர்களுக்கு எல்லா இை றநிலையுமாகத் திகழ்கின்றது. பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம் அர்ச்சை ஆகிய ஐந்து நிலைகளையும் இவ்வியப் பிரபந்தங்கள் பேசினாலும், அவற்றின் விசேஷ நோக்கு அர்ச்சாவதாரமே என்று ஆசாரிய ஹிருதயம் என்ற தத்துவ நூல் அறுதியிடும். ஆக, அர்ச்சாவதாரத்தின் நிலைக்களங்களான திருக்கோயில் கள் கண்டுள்ள திவ்விய தேசங்களின் பெருமையைப் பேசுவதே, அருளிச் செயல்களின் பெருமையாகின்றது. அத்திவ்விய தேசங்கள் அல்லது திருப்பதிகள் இந்நெறியின் பிரமேயம் (சொல்லப்படும் பொருள்) ஆயின. அருளிச் செயல்களையும் திருக்கோயில்கள் திகழும் திவ்விய தேசங்களையும் ஒன்றாகவே பரவிப் போற்றிய ஆசாரியர்கள் பொலிக, பொலிக' என்ற திருவாய்மொழி யில் (5,2) நம்மாழ்வார் திருவாக்கு கூறுவதுபோல “கடல் வண்ணன் பூதங்களாக'ப் பொலிந்து வியாக்கியானங்களை ஆக்கித் தந்து, ஆழ்வார்களுடன் சேர்ந்து பிரமதாக்கள் (ஆதாரத்தில் நின்று பொருளை அளந்து ஆய்பவர்கள்) ஆயினர். "பிரமாணம்’, பிரமேயம்', 'பிரம்ாதா என்ற மூன்றம்சம் கொண்ட வைணவ சமயநெறிக் கொள்கையை அப்படியே இலக்கியத்தோடு சமயம் பக்தி வழியில் கண்ட உறவாக்கிச் சடகோபன் செந்தமிழ் நூலில், பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் விளக்குகின்றார்கள். அந்த விளக்கம் கம்பதிாட்டாழ்வாகின் சடகோபரந்தாதி" நூலின் ஒரு பாசுரத்தின் பொருளை அப்படியே விரிவாக்கியது போலத் திகழ்கின்றது. பாடல் இதுதான்: .