பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1$2 சடகோபன் செந்தமிழ் நெஞ்சும் இசைந்தொழிந்தோம். (26) என்றும் மேலே சொல்லப் போகின்றார். ஆகவே, நெஞ்சை விளித்து வார்த்தை சொல்லுவதென்பது பக்தர்கட்கு ஒரு நல்ல பொழுது போக்காக அமைகின்றது. நெஞ்சு பிரிந்து போய் விட்டதாகச் சொல்லுவதும் அப்படியே நெஞ்சு விடுதுTதாகச் சொல்லுவதும் அப்படியே. 4. திருவாய்மொழி : இது 100 பதிகங்கள் அடங்கிய நூல். பாசுரங்கள் யாவும் அந்தாதித் தொடையால் அமைந்து முதற் பாசுரத்தின் தொடக்கச் சீரும் இறுதிப் பாசுரத்தின் இறுதிச் சீரும் மண்டலித்து அமைந்துள்ளது. ஒவ்வொரு திருவாய்மொழியின் பலச் சுருதிப் பாசுரத்தில் (திருக்கடைக் காப்புச் செய்யுளில்) ஆழ்வாரின் முத்திரை அமைந்துள்ளது. இவர்தம் பாசுரங்கள் தானான் தன்மையில் நின்று ஆழ்வார் பேசுவதாக அமைத்த பாசுரங்கள் (இப்படி அமைந்தவை 73 பதிகங்கள்), பிராட்டியின் நிலையை ஏறிட்டுக்கொண்டு பேசும் பாசுரங்கள் (இப்படி அமைந்தவை 27 - பதிகங்கள்) என்று இருவகையாக அமையும். முன்னவற்றைப் புறத் துறைப் பாடல்கள் என்றும், பின்னவற்றை அகத்துறைப் பாடல்கள் என்றும் கருதலாம். ஆழ்வாரின் ஞான நிலை முறுகி நிற்கும்போது முன்னலை பிறந்தன; பிரேம நிலை மீதுார்ந்து நிற்கும்போது பின்னவை தோன்றின. ஆசாரி ஹிருதயம் என்ற நூல் இதனை, ஞானத்தில் தம்பேச்சு . . . . பிரேமத்தில் பெண் பேச்சு (சூத்.118) என்றவாறு அமைந்துள்ளன என்று கூறும்.இந்த 27பதிகங்களே யன்றி திருவிருத்தம் முழுதுமே அகத்துறைப் பாடல்களாகும். இவை பற்றி இந்நூலில் பின்னர் விளக்கப் பெறும் இப்பிர 3. அகப்பொருள் தத்துவம் (கட்டுரை.7) காண்க,