பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 1ገ? ஒவ்வொரு பதிகத்திலும் (திருவாய்மொழியிலும்) உள்ள பாசுரங்கள் தாழிசைகள் என்றும், இவை நான்கடியின் மிகாமல் வந்தவை என்றும் கூறினர். ஒவ்வொரு பதிகப் பாக்களும் ஒரு பொருள் மேல் அடுக்கி வந்தன என்றும் கூறினர். அவர் எழுத்தெண்ணி வரும் கட்டளைக் கலித் துறையைத் தரவுக் கொச்சகம்’ என்றனர். எனவே, திருவாய்மொழிப் பாசுரங்க ளெல்லாம் பிற்கால இலக்கண நூல் கொண்டு விருத்தப் பாக்கள் என்று கூறலாகாது என்பதும், திருவிருத்தப் பாசுரங்களெல்லாம் அவ்வாறே கட்டளைக் கலித்துறை என்று கூறுதலாகாது என்பதும், இவற்றைத் தொல்காப்பிய இலக்கணம் கொண்டு "தாழிசைகள்' என்றும், தரவுக் கொச்சகம்’ என்றும் கூறுதல் வேண்டும் என்பதும் அறியப்பெறுகின்றன. (ஈ) பிரயோக விவேக நூலார் பல இலக்கணக் குறிப்பு களுக்கு திருவாய்மொழியிலிருந்து பல மேற்கோள்களை எடுத்துக் காட்டியுள்ளனர். இரண்டாம் பாட்டின் உரையில் திருநாராயணன் தாள் காலம் பெறச் சிந்தித்துய்மினோ (4. 1:1) என்பதனையும், பதினோராவது பாட்டின் உரையில் *பத்மநாபன் உயர்வற உயரும் பெருந்திறலோன்” (2:7; 11) என்ற பாசுரத்திலிருந்து எனக்கே தன்னைத் தந்த கற்பகம்’ என்ற பகுதியையும், முப்பத்தைந்தாம் பாட்டின் உரையில் வைத்த நாள் வரை (3, 3; 10) என்ற பாசுரப் பகுதியாகிய ‘பைத்த பாம்பணையான்' என்பதனையும், முப்பத்தாறாவது பாட்டின் உரையில் பற்பநாபன் உயர்வற உயரும் பெருந் திறலோன், எற்பரன் (2, 7:11) என்ற பகுதியையும் முப்பத்தொன்பதாம் பாட்டின் உரையில் கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர், பெரு நாடு காண இம்மையிலே பிச்சை தாம் கொள்வர் (4. 1: 1) என்ற பகுதியையும்' நாற்பத்தேழாம் பாட்டின் உரையில் வைகல் பூங்கழிவாய் ச-12