பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 சடகோபன் செந்தமிழ் வந்து மேயும் குருகினங்காள்...கைகள் கூப்பிச் செல்வீர்! (6.1: 1 )என்ற பகுதியையும், நாற்பத்தொன்பதாம் பாட்டின் உரையில் பால்வாய்ப் பிறைப்பிள்ளை யொக்கலைக் கொண்டு பகல் இழந்த, மேற்பாற்றிசைப் பெண் புலம்புறு மாலை (திருவருத் -35), வேனிலஞ் செல்வன் சுவைத் துமிழ் பாலை' (திருவிருத். 26) என்ற பகுதிகளையும் மேற் கோளாகக் காட்டியுள்ளனர். வேறு சில சொற்றொடர்களும் 'காரிமாறன்’ என்ற ஆழ்வார் பெயரும் காட்டப் பெற்றுள்ளன. (உ) இலக்கணக் கொத்து ஆசிரியராகிய சுவாமி நாத தேசிகர் கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்: (திருவாய் 4, 1: 1) என்ற பகுதியை மேற்கோளாகக் காட்டினர். - - திருவாய்மொழி பல வகையிலும் சிறப்புற்று விளங்கு வதனால் உரையாசிரியர் பலரும் பிற்கால நூலாசியர்களும் அதிலிருந்து இவ்வாறு மேற்கோள்கள் காட்டித் தம் படைப்புகளைச் சிறப்பித்துக் கொள்ளலாயினர். .