பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix அந்தமி லாமறை யாயிரத் தாழ்ந்த அரும்பொருளைச் செந்தமி ழாகத் திருத்தில னேல்நிலத் தேவர்களும் தந்தம் விழாவும் அழகும்என் னாம்? தமி ழார்கவியின் பந்தம் விழாஒழு கும் குரு கூர்வந்த பண்னவனே(23) திருக்குருகூர் பண்ணவன், புனிதன், சடகோபன் வேதங் களின் அரு ைமயான சாரத்தை மிகச், செவ்விய தமிழ்ப் பிரபந்தமாகச் சீர்செய்து அருளினார். அஃதின்றேல் கோயில்களில் ஒதுவதற்குரிய நித்திய நைமித்திக விழா சிறப்பிற்கான பாஞ்சராத்திர சாத்திர சம்பந்தமான அருளிச் செயல்கள் கிடைக்காவேர் இச்சடகோபரந்தாதிப் பாடல் அறுதியிடுவதுபோல், சடகோபன் அருளிய அனைத்துப் பாசுரங்களும் சாத்திரத் தகுதியுடையனவே. இன்னும் வைணவத் திருக்கோயில் களில், குறிப்பாக ஆழ்வார் திருநகரி, திருவரங்கம், சிரீவில்வி புத்துரர் ஆகியவற்றில் திவ்வியப் பிரபந்தங்கள் நித்திய நைமித்திகங்களில் சிறப்பான இடம் பெற்றுத் திகழ்கின் றன. இவற்றிலுள்ள தோத்திரப் பகுதியும்கூட, மற்றைய சமய, தோத்திரப் பாடல்களிலிருந்து வேறுபட்டு, பாடல் களைப் பாடுவோர் - 'சேவிப்போர் - நிலையில், அவர் களது ஆன்மாதுபவத்தையும் அவற்றில் கலந்து வரும் நிலையில், சாத்திரமாகிவிடும் தகுதி பெறுகின்றன. பக்திப் பனுவல்களின் ஏற்றமே, அவற்றைப் பயில்வோர் அந்தப் பாடல்களில் தோயும் அநுபவமாகும். மேனாட்டு அறிஞர் நார்மன் கட்லர் என்பார் தமது நூலில் இந்தப் பாங்கினை 1. Norman Cutler Songs of Experiences : The Poetics of Devotion. pp i 0-??