பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் #31 ஆடியாகத் தானும் அவன் விபூதியில் ஒருவனாகச் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதுவே இந்த உண்மை, இராசகுமாரன் ஒருவன் ஓர் அழகிய தோட்டத்தைக் கண்டு உள்ளே புக நினைத்தும் கட்டுங்காவலுமாக இருந்தது கண்டு அஞ்சி நிற்கும்போது இதனை அறிந்த ஒருவன், இஃது உனது தகப்பனுடையது காண்’ என்று எடுத்துக் கூறி இதில் நீ நினைத்தபடி புகுந்து திளைத்துப் பரிமாறலாம் என்று விளக்குவதுபோலக் கொள்க. இந்த சம்பந்தஞானத்தை சட்டாசிரியர் இந்தப் பாசுரத்தின் வியாக்கியத்தில் ஒரு வரலாற்று மூலம் விளக்குகின்றார். வணிகன் ஒருவன் தன் மனைவி கருவுற்றிருக்கும் காலத்தில் பொருள் தேடும் விருப்பினால் வெளிநாடு சென்றான். அவளும் கருவுயிர்த் தாள். மகனும் தக்க வயது அடைந்து தன் தகப்பனின் தொழிலையே தன் தொழிலாக மேற்கொண்டான். இவனும் பொருளீட்டப் போனான். இருவரும் தத்தமக்கு வேண்டிய சரக்குகளை வாங்கிக் கொண்டு ஒரு பந்தலில் வந்து தங்கினர். அந்த இடம் இருவருக்கும் போதவில்லையாதலால் விவாதம் உண்டாயிற்று. அச்சமயம்இருவரையும் அறிந்தான் ஒருவன் வந்து இவன் உன் தகப்பன்; நீ இவன் மகன்' என்று தந்தை-மகன் என்ற சம்பந்தத்தை அறிவித்தான். அப்பொழுது அவ்விருவரும் முன்பே நம் சம்பந்தம் தெரிந் திருந்தால் இரண்டு சரக்குகளையும் ஒன்று சேர்த்துப் பொருளீட்டியிருக்கலாம். இனி என்ன செய்வது? என்று அளவளாவிக் களித்திருந்தனர். அதுபோல ஒர் ஆசாரியன் வாயிலாக எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம் இன்னதென்று தெரிந்து கொண்டால், அதனால் நாம் அழியாப் பேறெய்திச் சுகமுற்று வாழலாம். -

. . . எம்பெருமானுக்கும் நமக்கும் உள்ள உறவு ஒன்பது வகைப்படும் என்று சாத்திரங்கள் கூறுவதை எட்டெழுத்து