பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 133 6. நாரபதத்தாலே, (vii) சரீர-சரீரி (உடல்-உடலையுடையவன்) என்ற உறவு கூறப் பெறுகின்றது. - 7. அயன பதத்தாலே, (viii) ஆதார-ஆதேய(தாங்குகிறவன்-தாங்கப்படும்பொருள்) தொடர்பு காட்டப் பெறுகின்றது. 8. ஆய பதத்தால், (ix) போகத்தை அதுபவிப்பவன்-போக்கியப் பொருள் (போக்த்ரு-போக்கிய உறவு) என்ற சம்பந்தம் சாற்றப் படுகின்றது. ஆக, திருமந்திரம் இறைவனுக்கும் ஆன்மாவுக்குமுள்ள ஒன்பது வகை உறவுகளைச் சொல்லித் தலைக்கட்டுகின்றது. இந்த ಳ್ಗಣ್ಣುಮಿಣ್ಯಹಕFಣ சம்பந்தங்கள் ஒர் ஆன்மாவுக்கும் றிேவிதி"ஆன்மாவுக்கும் வினைப்பயனால் நேர்கின்ற தந்தை-தனயன் முதலிய உறவுகள் அந்த வினையின் தொடர்பு நீங்கும் போதெல்லாம் மாறி விடுகின்றன. ஆனால் இறைவனுக்கும் ஆன்மாவுக்குமுள்ள சம்பந்தம் 'உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழியாது’ (திருப். 28) என்று ஆண்டாள் அருளியவாறு அழியாதிருத்த லாகும். இதனைப் பிள்ளை உலக ஆசிரியர் அருளிச் செய்த கவவித சம்பந்தம் என்ற நூலில் தெளிவாகக் காணலாம். ஈண்டு நாம் கருத வேண்டியது கான்காவது சம்பந்த மாகிய நாயக-நாயகி பாவனை என்பது, இந்த உறவே அகப் பொருள் தத்துவமாக விரிகின்றது. இந்தஉறவே ஏனையவை எல்லாவற்றுள்ளும் சிறந்தது; உயிராயது. இந்த முறையில் பரமான்மாவைத் தலைவனாகவும் சீவான்மாவைத் தலைவி யாகவும் வைத்து விளக்கும் பாடல்களை நாலாயிரத்திலும் தேவாரத்திலும் காணலாம். ஆயினும், வைணவப் பெரு மக்களே சங்க கால நெறியையொட்டி பிற்காலத் தத்துவ முறையைக் கலந்து ஓர் அகப்பொருள் நெறியினை அமைத்துக் காட்டிய பெருமையினைப் பெற்றனர்.