பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் 185 தாமான நிலையிலிருந்து பேசுவர். பிரேம நிலையிலிருக்கும் பொழுது,பெண்தன்மையை அடைந்து வேற்று வாயாலே சாகப் பேசுவர். அப்போது நம்மாழ்வாருக்குப் 'பராங்குசர் என்ற ஆண்மைப் பெயர் நீங்கிப் அபராங்குச நாயகி என்ற பெண்மைப் பெயரும், திருமங்கை யாழ்வாருக்குப் பரகாலர்' என்ற ஆண்மைப் பெயர் நீங்கிப் பரகால நாயகி என்ற பெண்மைப் பெயரும் வழங்கப். பெறும். - இங்ங்ணம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும் பொழுது, அவர்கள் தோழி, தாய், மகள் என மூவருள் ஒருவரின் தன்மையைத் தாம் அடைந்து கூற்றுகள் நிகழ்த்துவர். - சம்பந்த உபாய பலன்களில் உணர்த்தி துணிவு தற்றம் ஆகிய பிரஜ்ஞாவஸ்தைகளுக்குத் தோழி தாயார் ன் என்று பேர் (133) (பிரஜ்ஞாவஸ்தை - மூன்று காலங்களையும் அறியும் அறிவின் நிலை) என்று ஆசாரிய ஹிருதயம் கூறுகின்றது. இங்கனம் மூன்று நிலைகளாக வடிவெடுக்கும் பாசுரங்கட்குத் தத்துவ மும் கூறுகின்றது. இந்த மூன்று நிலைகளையும் மூன்று ‘பிரஜ்ஞாவஸ்தைகள்’ (அவஸ்தை-நிலை } என்று விளக்கமும் தருகின்றது. அந்த விளக்கங்களைப் பின்னர்க் காண்போம். இங்ங்னம் ஆழ்வார்கள் பெண்மை நிலையிலிருந்து கொண்டு எம்பெருமானை அநுபவிக்கும் பொழுது அவர்கள் பாசுரங்களும் தாய் சொல்வதுபோல் வடிவெடுத்துத் தாய்ப் பாசுரம்" என்று பெயர் பெறும்; தோழி சொல்வதுபோல் உருக்கொண்டு தோழிபாசுரம் என்று திருநாமம் பெறும்; தலைவி பேசுவதுபோல் வடிவெடுத்து மகள் பாசுரம் என்று வழங்கப்பெறும். இங்ங்ணம் மூன்று வகையாகக் கூற்றுகள்