பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சடகோபன் செந்தமிழ் நிகழ்ந்து பாசுரங்களாக வெளிவந்தாலும் பாசுரங்கள் பேசுகின்றவர்கள் ஆழ்வார்களேயாவர். இதனைப் பதிகங்கள் தோறும் வரும் பலசுருதிப் பாடல்களால் (திருக்கடைக் காப்புப் செய்யுட்களால்) தெளிவாகும். திருவரங்கப் பெருமான்மீது தாய்ப்பாசுரமாக அருளிய பதிகத்தில்’ வண்குருகூர்ச் சடகோபன், முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் என்றும்; மலைநாட்டுத் திருப்புஜியூர்,ஏழ்இபருமான்மீது" தோழி பாசுரமாக அருளின திேன் ப்ல சுருதிப் பாசுரத்தில் தொண்டர் தொண்டர், தொண்டர் தொண்டர் சடகோபன்சொல், நேர்பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும் என்றும், மலைநாட்டுத் திருமூழிக்களத்து உறையும் எம்பெருமான்மீது மகள் பாசுரமாக அருளிய பதிகத்தின் திருக்கடைக்காப்புச் செய்யுளில் வண்குருகூர்ச் சட்கோபன் வாய்ந்துரைத்த அழிவு இல்லா ஆயிரத்துள இப்பத்தும் என்றும் கூறியிருப்பதனால் இதனை அறியலாம். ஏனைய அகப்பொருள் பாசுரங்களிலும் இதே போக்கு இருப்பதையும் கண்டு மகிழலாம். ஓர் ஆறானது பல வாய்க்கால்களாகப் பெருகி வேறு வேறு பெயர்களைப் பெற்றாலும் அவற்றில் பாய்ந்து செல்லும் நீர் ஒரே ஆற்று நீராகவே இருக்கும் என்பதை நாம் அறிவோம். அங்ங்னமே ஆழ்வாரது சொல் மாலைகள் மூன்று நிலைகளாக வழிந்து புறப்பட்டாலும், அவை ஆழ்வார்களது பாசுரங்களாகவே தலைக்கட்டும். - - திருவாய்மொழியில் 27 பதிகங்கள் பெண் பாவனையில் பேசியவைகளாக அமைந்துள்ளன. பெண் நிலையிலிருந்து பேசியவற்றுள் தோழி பாவனையில் பேசியவை மூன்று 2 இருவாய், 7.2.'கங்குலும் பகலும் 3. டிெ 8.9. கருமானிக்க மல்ைமேல்.’ 4. டிெ. 9.7. எங்கர்னல் ஆகம்.