பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத்துவம் - *赛邵9 திருமந்திரத்தின் இரண்டாவது சொல்லாகிய கம என்பது இந்நிலையைக் குறிக்கின்றது. இச்சொல்லை ந4-ம; என்று இரண்டாகப் பிரிக்கலாம். இவ்விரண்டு எழுத்துகளும் தனித்தனிப் பொருளைத் தருதலின் பதங்களாயின." இவற்றுள் ஆறாம் வேற்றுமையுடன் கூடிய 'ம' என்னும் பதம் சேதநன் ஈசுவரனுக்கே உரியவன்' என இயம்பும் நான்காம் வேற்றுமையின் பொருளுக்கு மாறாய்த் தனக்குத் தான் உரியன்' என்னும் பொருளைக் கொடுக்கின்றது. ஆனால் 'ந' என்னும் பதமோ அதற்கு எதிர்க்றைப் பொருளால் அதைத் தடுத்து நிறுத்தித் தனக்குத்தான் உரியனல்லன் என்பதை அறிவிக்கின்றது. இதனால் நான் பிறனுக்கு (ஈசுவரனுக்கு) உரியவன் என்பது பெறப்பீடு கின்றது. இம்முறையில் இச்சொல் ஈசுவர பாரதத்திகி யத்தைத் தெரிவிக்கின்றது. இன்னும் விளக்கிக் கூறினால் இச்சொல் ஞானத்தினால் ஏற்படும் சுதந்திரத் தன்மையை ஒழிக்கின்றது. இதன் காரணமாய் ஏற்படும் தன்னைத் தானே காத்துக் கொள்ள முடியும் என்ற எண்ணத்தையும் நீக்குகின்றது. இனி, இவனைக் காத்து இரட்சிப்பவன் ஈசுவரனே ஆகின்றான் என்ற துணிவு பிறக்கின்றது. அஃதாவது, ஈசுவரனே உபாயம் என்ற பொருள் கிடைக் கின்றது. இந்த மன நிலைதான் தாய் என்று குறிக்கப் பெறுகின்றது, திருவாய்மொழியில் தாய் பாவனையில் பேசும் ஏழு பதிகங்களும் ஈசுவர பாரதந்திரியத்தையும், அவனே உபாய மாகின்றான் என்ற கருத்தையும் தெரிவிக் கின்றன. ஆகவே, இவை உபாயத்தில் உறுதி பூண்டிருக்கும் நிலையிலே எழுந்த பேச்சுகள் என்பது தெளிவாகின்றது. மகள் பாசுரங்கள் : மகள் பாசுரமாக நடைபெறுகின்ற பதிகங்களின் தத்துவப் பொருளையும் எடுத்துக்காட்டு 7. முமுட்சு-78, 8. @&... 79. 80.