பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருள் தத் துவம் 191 மன நிலைதான் மகள்’ (தலைவி) என்று குறிப்பிடப் பெறுகின்றது. திருவாய்மொழியில் மகள் பாவனையில் பேசும் பதிகங்களுக்'இந்த நிலையையே குறிக்கின்றன என்பதை இந்தப் பதிகங்களை ஊன்றிப் படிப்பதனால் அறியலாம். இம் மூன்று நிலைகளும் தோன்றுவதை ஆசாரிய ஹிருதயம் (சூத்திரம்-134) விளக்குகின்றது. வேதாந்தங்களில் குறிப்பிடப்பெறும் பக்தி இங்ானம் ஆழ்வார்களிடம் காதல் முறையில் பரிணமித்து நிற்றலை அறிய முடிகின்றது. இவர்கள் எம்பெருமான்மீது கொள்ளும் காமம் பகவத்விஷய காமம்’ என்று வழங்கப் பெறும். இங்ஙனம் இவர்கள் மாதவன்மீது கொள்ளும் காமம் மங்கையர்மீது கொள்ளும் காமத்தினின்றும் வேறு பட்டது. ஆயினும், சிற்றின்ப அநுபவமாகியகாதலுக்குக் கூறப் பெறும் அகப்பொருள் துறைகள் யாவும் இந்த பகவத் விஷய காமத்திற்கும் கூறப்பெறும். சிற்றின்ப அதுபவத்திற்குக் கொங்கை முதலியன சாதனமாயிருப்பது போல, பகவத் விஷயா நுபவத்திற்கும் பரபக்தி". பரஞானம்", பரமபக்தி' என்பவை இன்றியமையாதனவாக இருப்பதால் அவையே கொங்கை முதலான சொற்களால் இவ்வாழ்வார்களின் 12. பரபக்தி - எம்பெருமானை நேரில் காண்வேண்டும் என்ற ஆவல். 13. பரஞானம் - எம்பெருமானை நேரில் காணல் 14. பரமபக்தி எம்பெருமானை மே ன் மே லு ம் இடையறாது அநுபவிக்க வேண்டும் என்னும் ஆவல். அன்றியும், எம்பெருமானோடு கூடினபோது சுகிக்கும் படியாகவும். பிரிந்தபோது துக்கிக்கும்படி யாகவும் இருப்பது பரபக்தி;பகவானுடைய முழும்ை யான நேர்காட்சி பரஞானம்; இவனுடைய அநு பவம் பெறாவிடில் நீர்ைவிட்டுப் பிரிந்த மீன்போல் மூச்சு அடங்கும் படி இருத்தல் பரமபக்தி. இவ்வாறு நம் பண்டைய ஆசாரியர்கள் நிலைப் படுத்துவர்.