பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தோழிப் பாசுரங்கள் திருவாய்மொழியில் தோழியின் கூற்றாக வருபவை "தீர்ப்பாரையாம் இனி (4.6), துவளில் மணிமாடம் (6.5), கருமாணிக்கமலை (8.9) என்பவையாகும். இந்த மூன்றிலும் அகக்யார்ஹத்துவம் தெரியும் (ஆ..ஹி. 134). அநந்யார் ஹத்துவம் என்பது, மற்றவருக்கில்லாமல் ஈசுவரன் ஒருவனுக்கே அடிமைப் பட்டிருத்தலாகும். இதில் முதற் பதிகமாகிய தீர்ப்பாரையாமினி (4.6) என்ற பதிகம் வெறிவிலக்கு பற்றியது. 1.வெறிவிலக்கு தலைவிக்கு எம்பெருமானுடன் இயற் கைப் புணர்ச்சி நடைபெற்று விடுகின்றது. பிறகு பிரிவு ஏற் படுகின்றது. பிரிவாற்றாமையால் தலைவி வருந்துகின்றாள். இவள் நிலையைக் கண்டு தாய்மார்கள் இவள் நோயினையும் அது அவளுக்கு ஏற்பட்ட காரணத்தையும் அதற்குரிய மருந்தினையும் அறியாமல் வெறியாட்டெடுக்கின்றனர். தலைமகள் இதனைக் கேட்டு மிக வருந்துகின்றாள். தலைவி யின் துன்பத்திற்குக் காரணமுணர்ந்த தோழி இச்செயலைக் கண்டித்துக் கூறுகின்றதாக நடை பெறுகின்றது இப்பதிகம். தீர்ப்பாரை யாம் இனி எங்கனம் நாடுதும், அன்னைமீர்! - ஒர்ப்பாலிவ் ஒண்ணுதல் உற்றன் கோய்.இது தேறினோம்; *ー13