பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}98 சடகோபன் செந்தமிழ் 'உலகேழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவன் திருநாமங்களை இப்பெண் பிள்ளையின் செவிப்படச் சொல் லுங்கள் (4); மதுவார்துழாய்முடி மாயப்பிரான் கழல் வாழ்த்துங்கள்; அதுவே! இவள் உற்ற நோய்க்கு அருமருந்து. அதோளினைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடி மேலும், தாளினைமேலும் புனைந்த தண்ணந்துழாய் அம்மானது (திருவாய் 19:7) திருவடிகளை நினைந்து 'உன் சேவடி செவ்வி திருக்காப்பு (திருப்பல்) என்று. பல்லாண்டு பாடுவதே போதும் (3) என்கின்றாள். மேலும், இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல்அன்று: அக்தோ! குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள், கவளக் கடாக்களிறு அட்ட பிரான்திரு காமத்தால் தவளப் பொடிகொண்டு நீர்இட் டிடுமின்: தணியுமே (5) |பரிசு - மார்க்கம்; அணங்கு ஆடுதல் - வெறி ஆடுதல்: பயந்தன ள் - நிறவேறுபாடு அடைந்தனள், கவளம்மதகரமான மருந்துகளைக் கவளம் கொண்டதாய்;. கடா - மதம் பெற்றதான; அட்ட - தொலைத்த: தவளம் பொடி - பரிசுத்தமான பாத துளி; இட்' டிடுமின் - தூவுங்கள்: தணியும் - தீரும்; என்று சொல்லி வெறிவிலக்குகின்றாள். எம்பெருமா னுடைய திருநாமத்தை உச்சரித்து வைணவர்களுடைய பாத் துரளியைக் கொண்டு வந்து இவள்மீது துரவுங்கள்’’ என்று உண்மையான பரிகாரத்தை எடுத்துக் காட்டுகின்றாள். "அன்னைமீர் சிறிதும் ஒய்வின்றி வெறியாடலைச் செய்து வருகின்றீர்கள். இதனால் நோய் தீராத மாத்திரமே