பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 சடகோபன் செந்தமிழ் அதிபதியால் மயர்வு அற மதிநலம் அருளப் பெறுவள்: உலகம் நிறைந்த பொருள் பெறுவள்; தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல்மாலைகள் சொல்லுவள்’ என்று பலவும் சொல்லிவிட்டு, ஆனால் இவளுக்கு ஓர் அகால மரணம் உண்டு; அதற்குத் தப்பினாளாகில் சுகமே ஜீவிக்கும். அஃது என்னென்னில்: "திருதொலைவில்லிமங்கலத்தேகொடு போகாதே ஒழியப்பெறில் இவளுடன் நெடுங்காலம் வாழலாம். இவளை அங்குக் கொண்டு சென்றீர்களாகில் இவளை இழக்க நேரும்; ஆகவே இந்த ஒரு கண்டத்திற்குத் தப்பிப் பிழைப்பது கஷ்டமே என்று சோதிடர்கள் சொல்லி யிருந்தார்கள். ஆகிலும் இவளைத் தொலைவில்லி மங்கலத் திற்குக் கொண்டு போகாதிருக்கும்படியான குடியல்லவே. இவள் அங்குப் புக்கு இறப்பினும் அமையும். அங்கு அழைத்துப்போய் சேவை பண்ணி வைத்தே தீருவது என்றிருக்கும் குடியாகையாலே அப்படியே செய்ய நேர்ந்தது. அதனால் விளைந்த தீங்கை எடுத்துரைக்கின்றாள் தோழி. துவளில் மாமணி மாடம் ஓங்கும் தொலைவில் லிமங்க லம்தொழும் இவளை நீரினி யன்னை மீர்! உமக் காசை இல்லை; விடுமினோ தவள வொண்சங்கு சக்கர மென்றும் தாம ரைத்தடங் கனென்றும் குவளை யொண்மலர்க் கண்கள் நீர்மல்க கின்று கின்று குமுறுமே (1) Iதுவள்இல் - குற்றமற்று; தவளம் - வெண்ணிறம்; நீர் மல்க - நீர் பெருக குமிறும் - குமிறா நின்றாள்.) என்பது முதல் பாசுரம். இதில்: தாய்மார்கள் பராங்குச நாயகியை இடுப்பில் எடுத்துக்கொண்டு தொலைவிலி டிங்கலம் சென்றனர். இவள் அங்குச் சென்றதும் எம்பெரு