பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிப் பாசுரங்கள் 205 இராஜ கோஷ்டியில் உகும், இறும் என்று பொருள் சொல்ல, விக்கிரமசிங்கன் என்பான் ஒருவன் ஆங்கன் அன்று, கன்றைக் கடக்கக் கட்டி வைத்தால் முலைக் கண்கடுத்துப் பசு அலமந்து படுமாறுபோலே, உள்ளோடு கிலேசம் வாய் விட மாட்டாதே நோவுபடுகின்ற இவளுக்கு இது வார்த்தையோ? என்றான். பெருவெள்ளத்தில் சுழிக்குமாறு போலே, அகவாயில் உள்ளது வெளியிடமாட்டாள்; உள்ளே நின்று சுழிக்கிறபடி. இப்பாசுரத்தில் தொலைவில்லி மங்கலம் தொழும் என்கையாலே சரீரத்தின் செயல் சொல்லிற்று. தவள ஒண்' சங்கு சக்கரம் என்றும், தாமரைத் தடங்கண் என்றும் என்று சொல்லுகையாலே வாக்கின் செயல் சொல்லிற்று; குமுgாம். என்கையாலே, மனத்தின் செயல் சொல்லிற்று. 感、 மேலும் தோழி கூறுகின்றாள்: தொலைவில்லி மங்கலத் தின் இயற்கைச் சூழலே கவர்ச்சிகரமாக இருக்கும். திருவிழாக் காலங்களில் ஒத்துச்சொல்லுவார், சங்கீர்த்தனம் பண்ணு: வார், பாடுவார், இயல் விண்ணப்பம் செய்வாராய் எழுத்தும் சொல்லும் பொருளும் தெரியாதபடி விரவிக்கொண்டு எழுகின்ற ஒலியையுடைய திருநாளில்-அதாவது வேத ஒலியும் விழாவொலியும் (7 3:1) - என்றவாறு பலவகை யான தொனிகள் செவியமுதமாக இருக்கும். இப்படிப்பட்ட திருவிழாக் காலங்களில் தாய்மார் இப்பெண் பிள்ளையை அங்கு இட்டுக் கொண்டு சென்றதால் இவளுடைய ஈடுபாடு அதிகமாய் விட்டது. பிரம்மஞானம் பெற்ற சுவாதகேது போல் தம்பித்து நிற்கின்றாள், தேவபிரான் என்றே நெளிகின்ற வாயோடு கண்களில் நீர்பெருகி நிற்கும்படியாகக் கட்டுக் குலைந்து தளர்ந்து உருகுகின்றாள்.” (2) 'தண்பொருநையாற்றங்கரையை விளாக்குலை கொண் டிருக்கின்ற பரந்த சோலைகளையும் குளிர்ந்த நீர் நிலங்களை யும் இவளுக்கு நன்கு காட்டிக் கொடுக்கவே, இவள் அத்