பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 சடகோன் செந்தமிழ் என்று நாலடியாரும் கூறுவதால் ஏழை என்ற சொல் அறிவிலி என்று பொருளாயிற்று. இழைகொள்சோதி.காட்டினீர் 'ஆபரணத்துக்கு அழகு கொடுக்கும் பெருமாள் என்னும் படி எந்த ஆபரணமும் வேண்டாமல் ಕಿವಿ அழகையும் செந்தாமரை போன்ற திருக்கண்களையுமுடையனாய்வீற்றிருக்கும்படியைப் பெண்ணே பார் பார் என்று நீங்களே காட்டிக் கொடுத்த தனால் வந்த விளைவு இது. பின்னிரண்டு அடிகளால் தெரி விப்பது பின்னிருந்தமையைக் கண்டவுடனே கண்ணிரானது மழை பொழிந்தாற்போல் தாரை தாரையாய் பெருகத் தொடங்கிற்று; அதற்குமேல் மயக்கமும் வந்து குடிபுகுந்தது, மயக்கம்(சிறிது தெளிந்தவாறே அவனது திருக்குணங்களிலே நெஞ்சு உட்புகா நின்றது; அத்திருப்பதியுள்ள திக்கையே உற்று நோக்கி ஓயாமல் அஞ்சவி செய்யா நின்றாள்: இதுவா யிற்று இவளது நிலைமை. இனி இவளை இதினின்றும் மீட்க முடியுமோ?’ என்கின்றாள். மேலும் தோழி கூறுவாள் : இப்பெண் பிள்ளை பெரும் பாலும் மோகித்திருக்கும் இருப்பேயல்லது கண்ணைத் திறந்து பார்ப்பதே இல்லை. ஒருகால் பார்த்தாளாகில் அத் திருப்பதியுள்ள திசையையே பார்ப்பாள். எவ்விடம் பார்த்தாலும் கருப்பஞ் சோலையும் செந்நெற் பயிர்களும் தாமரைக் காடுகளும் திகழாநின்ற தண்பொருநையின் வட கரையிலே விளங்குவதான தொலைவில்லி மங்கலத் திருப்பதியையன்றி மற்றொரு திக்கைக் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை; பேசப்புகுந்தாலோ வாயில் வரும் பேச்செல் லாம் மணிவண்ணனைப் பற்றியதாகவே இருக்கும்’ உள்ளுறையில் கரும்பு. வைணவர்களின் மிக்க நல்லியல்பை யும், செந்நெல் - வரம்புற்ற கதிர்ச்செந்நெல்தாள் சாய்த்துத் தலைவணங்கும் தண் அரங்கமே (பெரியாழ். திரு. 4. 9:8) என்று பெரியாழ்வார் அருளிச் செய்தபடி வித்தைகள்