பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 f t தோழிப் பாசுரங்கள் முன்னி வந்தவன் கின்றி ருந்துறை யும் தொலைவில்லி மங்கலம் சென்னி யால்வணங் கும்.அவ் ஆர்த்திரு காமம் கேட்பது சிங்தையே! (10) (பின்னை - நப்பின்னை; நிலமாமகள் - பூமிப்பிராட்டி யார்; திருமா மகள் - பெரிய பிராட்டியார்: மாயம் - அதிசயம்; கூவுதல் - அழைத்தல்; சென்னி - தலை: சிந்தை - எண்ணம்) இவளது ஈடுபாட்டின் மேம்பாட்டினைக் கண்டு, 'இவள் நப்பின்னைப் பிராட்டிதானோ? பூமிப் பிராட்டிதானோ? பெரிய பிராட்டியார்தானோ? என்ன ஆச்சரியமோ? இவள் ந்ெடுமால் என்றே கூவா நிற்பாள்; முன்னதாகவே அவன் நின்று இருந்து உறையும் திருதொலைவில்லி மங்கலம் என்னும் திவ்வியதேசத்தைத் தலையால் வணங்குவாள், அந்தத் திருத்தலத்தின் திருநாமத்தைக் கேட்பதுவே சிந்தையாக இராநின்றாள்' என்கின்றாள் தோழி. ஆழ்வார் கிருஷ்ணாவதாரத்திலே ஈடுபட்டிருக்குந் தன்மையை நோக்குங்கால், 'நம் பின்னைப் பிராட்டி தானோ? என்று நினைக்கத் தோன்றும். வராகப் பெருமான் திறத்தில் ஈடுபட்டிருக்கும் தன்மையை நோக்குங்கால் பூமிப் பிராட்டிதானோ? என்று நினைக்கத் தோன்றும், இராமவதாரத்தில் இவள் கொண்டுள்ள ஈடுபாட்டை நோக்கினால் சீதாப்பிராட்டிதானோ? என்று நினைக்கத் தோன்றும். பிறந்திட்டாள் : இங்கே ஈடு: "அவர்களுக்கு இவள் படி இல்லாமையாலே அவர்கள் ஒப்பன்று; லோகமெல்லாம் வாழுகைக்கு இவள் ஒருத்தி பிறந்தாளோ! என்றுமாம்' என்பது.