பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 சடகோபன் செந்தமிழ் என்று கூறுவதை நோக்குக. எப்பொழுதும் அவன் திருவருளிலேயே மூழ்கிக் கிடக்கின்றாள். அவனுடைய திருவருள் இவளிடம் சேர்ந்தமைக்கு மறைக்க முடியாத அடையாளங்கள் பல உள்ளன என்று கூறி ஒன்றினை மட்டிலும் காட்டுகின்றாள். திருவருள் கமுகு ஒண்பழத்தது மெல்லியல் செவ்விதழே (6) |கமுகு - பாக்கு மரம்; இதழ் - உதடு) ‘எம்பெருமான் திருவருளால் இத்திருப்பதியில் வளர்ந்த கமுகு-திருவருள் கமுகு-ஈன்ற செவ்விய பழத்தின் நிறத்தையல்லவா ஒத்துள்ளது இவளுடைய உதடுகளின் நிறம்? இதனை, நீங்களே ஆராய்ந்து பார்க்கலாமே! என்கின்றாள். இவ்விடத்தில் திருவருள் கமுகு' என்பதற்கு இன்சுவை மிக்க ஈட்டின் பூரீசூக்தி: 'திருவருள் கமுகு என்று சில உண்டு; அதாவது நீரால் வளருகையன்றிக்கே பெரிய பிராட்டியாரும் சர்வேசுவரனும் கடாட்சிக்க, அத்தால் வளருவன சில” என்ற பகுதி எண்ணி எண்ணி மகிழத் தக்கது. - - - இத்திருப்பதியின் இயற்கைச் சூழலைக் கூறுவாள்போல் அங்கு அஃறிணைப் பொருள்களும்கூட ஒன்றோடொன்று கலந்து பரிமாறி வாழா நிற்கும் என்பதனையும் காட்டு கின்றாள். மெல்லிய இலைத் தழைப்பையும் அழகினை யுடைய வெற்றிலைக் கொடி முதிர்ந்து இளகிப் பருத்த கமுக மரத்தைத் தழுவி நிற்கின்றது. (வெற்றிலை) தன் கணவனான கமுகுக்குத் தன் உடம்பை முற்றுாட்டாகக் கொடுக்கும் போலே காணும்' என்பது ஈடு. இதற்குமேல் தென்றற்காற்று வாழைத் தோப்பில் வீசா நிற்கின்றது, 'இப்படிப்பட்ட வாய்ப்பு அமைந்த தலத்தில் இவளும் தான் உகந்த பொருளை அணையப் பெற்றது வியப்பு அன்று,