பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 சடகோயன் செ ந்தமிழ் தோழியின் மதிநுட்பமெல்லாம் புலப்படுமாறு அமைந்த இத்திருவாய்மொழியால் ஆழ்ந்த தமிழ்ப் பண்பாடு தெள்ளி தின் விளங்குவதைக் கண்டு மகிழ்கின்றோம். மேலும், தோழியின் பேச்சால் தலைமகள் திருப்புலியூர் எம்பெரு மானைத்தவிர பிறருக்கு அடிமைப்பட்டவள் அல்லள் என்பது. அநந்யார்ஹத்துவம் - தெரிகின்றது என்பதனையும் அறிய முடிகின்றது. இங்ங்ணம் இந்த மூன்று பதிகங்களாலும், "இந்த ஆன்மா பிற தெய்வங்கட்கு அடிமைப்பட்டது மன்று; தனக்குத் தானே உரியது மன்று; பகவான் ஒருவனுக்கே உரியது” என்ற கருத்தாகிய 'அநந்யார் ஹசேஷத்துவம்' தெளிவாக விளங்குகின்றது. -